பள்ளி மாணவர்களுக்குள் மோதல்.. கத்திக்குத்து..! மருத்துவமனையில் அனுமதி!!

பள்ளி மாணவர்களுக்குள் மோதல்.. கத்திகுத்து..! மருத்துவமனையில் அனுமதி!!
 | 

பள்ளி மாணவர்களுக்குள் மோதல்.. கத்திக்குத்து..! மருத்துவமனையில் அனுமதி!!

தென்காசி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு இடையே நடந்த மோதலில் ஒரு மாணவர் சக மாணவரை கத்தியால் குத்தியுள்ளார். ஆலங்குளம் அருகே உள்ள வீராணத்தைச் சேர்ந்தவர் இஸ்மாயில். இவரது மகன் செரீப் (17). இவர், வீரகேரளம்புதூரில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவருக்கும் அதே பள்ளியில் படிக்கும் மாணவர் முருகன் என்ற மாணவருக்கும் நேற்று பள்ளியில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

பள்ளி மாணவர்களுக்குள் மோதல்.. கத்திக்குத்து..! மருத்துவமனையில் அனுமதி!!வழக்கம்போல் காலையில் பேருந்தில் இருந்து இறங்கி செரீப் பள்ளிக்கு நடந்து சென்றுகொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த அந்த மாணவர் முருகன், செரீப்புடன் மீண்டும் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. வாக்குவாதம் அதிகரித்ததால், முருகன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சக மாணவரின் கழுத்து, கையில் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த செரீப், தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

பள்ளி மாணவர்களுக்குள் மோதல்.. கத்திக்குத்து..! மருத்துவமனையில் அனுமதி!!இதனிடையே சகமாணவரை கத்தியால் குத்திய முருகனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் பிரச்சினை காரணமாக இந்தக் கத்திக் குத்துச் சம்பவத்தில் முருகனுக்கு வெளியாட்கள் இருவர் உதவியதாகப் போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், பள்ளி அருகிலும், மாணவரின் ஊரான வீராணத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP