பொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி! - வறுமையின் கோர பிடியில் மூதாட்டிகள்!!

பொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி! - வறுமையின் கோர பிடியில் மூதாட்டிகள்!!
 | 

பொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி! - வறுமையின் கோர பிடியில் மூதாட்டிகள்!!

கோவை மாவட்டம் பேரூர் வட்டம் பூலுவப்பட்டியை சேர்ந்த மூதாட்டிகள் மூவர், நடக்க முடியாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்திற்கு வந்தனர். அவர்கள் அங்கிருந்தவர்கள் விசாரித்தப்போது, 'பொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி; ரேஷன் கடையில தரமாட்டேங்கறாங்க' என்று, அப்பாவித்தனமாக பதில் வந்தது.

பொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி! - வறுமையின் கோர பிடியில் மூதாட்டிகள்!!

முதியோர் உதவித்தொகை வாங்கும் முதியவர்களுக்கு, ரேஷன் கடைகளில், 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இலவச அரிசி பல முறை கேட்டும், ரேஷன் கடையில் தர மறுப்பதாக எழுதப்பட்ட மனுவை கையில் வைத்திருந்தனர். முதியவர்களுக்கு வழங்கப்படும் 1,000 ரூபாய் உதவித்தொகையிலும், இந்த அரிசியிலும் தான் எங்களுக்கு வாழ்க்கை ஓடுகிறது ஆனால் அதனையும் முறையாக வழங்க மறுப்பதாக வேதனை கூறினர்.

பொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி! - வறுமையின் கோர பிடியில் மூதாட்டிகள்!!

சம்பந்தப்பட்ட மூவரும் புதிதாக உதவித்தொகை பெறுகின்றனர். அதை பதிவு செய்யாமல், ரேஷன் கடையில் ஸ்மார்ட் கார்டு காண்பித்து, அரிசி கேட்டுள்ளனர். அதனாலையே அவர்களுக்கு அரிசி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கு அரிசி கிடைக்க, உரிய தீர்வு ஏற்படுத்தப்படும் எனவும் மாவட்ட வழங்கல் அலுவலர் கூறினார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP