போலீசார் முன்னிலையில் உறுதிமொழி எடுத்த 'ரூட் தல' மாணவர்கள்!

பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த 30 மாணவர்கள் உறுதிமொழி எடுத்து போலீசாரிடம் பிரமாணப்பத்திரம் அளித்தனர்.
 | 

போலீசார் முன்னிலையில் உறுதிமொழி எடுத்த 'ரூட் தல' மாணவர்கள்!

பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த 30 மாணவர்கள் இன்று போலீசார் முன்னிலையில் உறுதிமொழி எடுத்து பிரமாணப்பத்திரம் அளித்தனர். 

சென்னை எம்.டி.சி பேருந்துகள் மற்றும் மின்சார ரயில்களில் குறிப்பிட்ட சில கல்லூரி மாணவர்களின் அட்ராசிட்டி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் அம்பத்தூர், ஆவடி ரயில் நிலையங்களில் மாணவர்கள் கத்தியுடன் சுற்றித்திரிந்த வீடியோக்கள் மக்களை பதைபதைக்க வைத்தன. அதைத்தொடர்ந்து, இரு தினங்களுக்கு முன்பு அரும்பாக்கத்தில் கல்லூரி மாணவர் ஒருவரை, மற்றொரு மாணவர் கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் சென்னை மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், சென்னை மாநகர காவல்துறையினர் பச்சையப்பன் கல்லூரி, மாநில கல்லூரி, நந்தனம் கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் தொடர் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். இதில், சென்னையில் 'ரூட் தல' என்ற பெயரில் இதுபோன்ற பிரச்னைகளில் ஈடுபடும் 90 மாணவர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். 

இந்த 90 மாணவர்களுடன்​ ஆலோசனை நடத்தவும், மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து அவர்களிடம் பேசவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். 

இந்நிலையில், அம்பத்தூர் துணை ஆணையர் ஈஸ்வரன் முன்னிலையில், பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த 30 மாணவர்கள் போலீசாரிடம் பிரமாணப்பத்திரம் அளித்தனர். இனிமேல் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் நடந்து கொள்ள மாட்டோம்; தவறு செய்ய மாட்டோம் என்று கூறி உறுதிமொழி அளித்தனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP