சென்னை, மும்பைக்கு ஆபத்து?! உருகும் பனிக்கட்டிகள்!

கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் இந்தியா பெரும் ஆபத்தில் இருப்பதாக ஏற்கனவே ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்ரஸ் தெரிவித்திருந்தார்.
 | 

சென்னை, மும்பைக்கு ஆபத்து?! உருகும் பனிக்கட்டிகள்!

கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் இந்தியா பெரும் ஆபத்தில் இருப்பதாக ஏற்கனவே ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்ரஸ் தெரிவித்திருந்தார். கடந்த மாதம் தாய்லாந்தின் பாங்காங்கில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்ற ஐ.நா பொதுச்செயலாளர் குட்ரஸ் முன்பு கணிக்கப்பட்டதை விட தற்போது கடல் மட்டம் வேகமாக அதிகரித்து வருவதாக, கிளைமேட் சென்ட்ரல் எனும் பருவ நிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்யும் அமைப்பின் சமீபத்திய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.

சென்னை, மும்பைக்கு ஆபத்து?! உருகும் பனிக்கட்டிகள்!

மேலும் பூமியின் வெப்பம் 1.5 டிகிரி செல்சியசுக்கு மிகாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்றும், வரும் 2050-ம் ஆண்டுக்குள் 45 சதவீத அளவுக்கு கரியமில வாயு கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்த அவர்,  புவி வெப்பமயமாவதால், இந்தியா, சீனா, ஜப்பான், வங்கதேசம் ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும். தாய்லாந்தில் 10 சதவீத மக்கள் வசிக்கும் பகுதிகள் கடலுக்குள் மூழ்கும் என்றும் குட்ரஸ் கூறியிருந்தார். 

சென்னை, மும்பைக்கு ஆபத்து?! உருகும் பனிக்கட்டிகள்!

இந்நிலையில், கிரீன்லாந்து தீவில் கடந்த 19990-களில் இருந்ததைவிட தற்போது 7 மடங்கு அதிகமாக பனிக்கட்டிகள் உருகி வருவதாக செயற்கை கோள் பதிவுகளை ஆய்வு செய்த சர்வதேச அளவிலான துருவ பகுதிகளில் ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பில் தெரியவந்துள்ளது.  கிரீன்லாந்தில் உருகும் பனிக்கட்டிகளால் மட்டும் இந்த நூற்றாண்டின் இறுதியில் உலக அளவில் கிட்டத்தட்ட 7 செ.மீ. அளவுக்கு கடல் மட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை, மும்பைக்கு ஆபத்து?! உருகும் பனிக்கட்டிகள்!

இதனால் உலகமெங்கும் கடலோர பகுதிகளில் வாழும் பல மில்லியன் மக்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில், துறைமுக நகரங்களான சென்னை, மும்பை, கொல்கத்தா, சூரத் ஆகிய நகரங்களுக்கு பெரும் ஆபத்து வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP