நடிகர் விஜய்யின் வீட்டில் விடிய விடிய வருமான அதிகாரிகள் சோதனை! கண்டுக்கொள்ளாத நடிகர் சங்கம்!!

நடிகர் விஜய்யின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் விடிய விடிய சோதனை!
 | 

நடிகர் விஜய்யின் வீட்டில் விடிய விடிய வருமான அதிகாரிகள் சோதனை! கண்டுக்கொள்ளாத நடிகர் சங்கம்!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நடிகர் விஜய்யின் பண்ணை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் விடிய விடிய சோதனை மேற்கொண்டனர். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில், நேற்று காலை 10 மணி முதல் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக சென்னை தியாகராய நகரில் உள்ள ஏஜிஎஸ் கல்பாத்தி அகோரம் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருமலை பிள்ளை தெருவில் இருக்கும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தலைமை இடத்திலும், வில்லிவாக்கம், தியாகராயநகர், நாவலூர், மதுரவாயல், உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் ஏ.ஜி.எஸ் திரையரங்குகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நடிகர் விஜய்யின் வீட்டில் விடிய விடிய வருமான அதிகாரிகள் சோதனை! கண்டுக்கொள்ளாத நடிகர் சங்கம்!!சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோன்று கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அன்புச்செழியன் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

நடிகர் விஜய்யின் வீட்டில் விடிய விடிய வருமான அதிகாரிகள் சோதனை! கண்டுக்கொள்ளாத நடிகர் சங்கம்!!

தியாகராய நகரில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகத்திலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் வெளியான பிகில் படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்தது. இதற்காக அன்புசெழியன் பைனான்ஸ் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய் பெற்ற சம்பளம் எவ்வளவு என்பது உள்ளிட்டவை தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன. 

நடிகர் விஜய்யின் வீட்டில் விடிய விடிய வருமான அதிகாரிகள் சோதனை! கண்டுக்கொள்ளாத நடிகர் சங்கம்!!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர் விஜய்யிடம்  விசாரணை நடைபெற்றது. இதனிடையே சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் அரை மணி நேரம் சோதனை மேற்கொண்டனர். பின்னர் நடிகர் விஜயை அவரது காரிலேயே சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள வீட்டிற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

நடிகர் விஜய்யின் வீட்டில் விடிய விடிய வருமான அதிகாரிகள் சோதனை! கண்டுக்கொள்ளாத நடிகர் சங்கம்!!

தொடர்ந்து பனையூர் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கிட்டத்தட்ட 12 மணி நேரமாக விடிய விடிய இந்த சோதனை இன்னும்  நீடித்துக் கொண்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் விஜய் வீட்டின் வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே தீவிரவாதியைப் போன்று, நடிகர் விஜய்யை ஷூட்டிங் தளத்தில் வைத்தே விசாரித்து, உடனடியாக தனது காரிலும் வர அனுமதிக்காமல், அரசு அதிகாரிகள்.. அவர்களது காரிலேயே சென்னைக்கு அழைத்து வந்து விசாரிப்பது குறித்து நடிகர் சங்கம் வாயைத் திறக்கவே இல்லை என சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP