ரம்மி சீட்டில் ரஜினி! வைரலாகும் ரசிகரின் முயற்சி!

ரம்மி விளையாட்டிற்கான சீட்டில் ரஜினியின் படம் இருப்பது போல ரசிகர் ஒருவர் காணொளிக்காட்சியை உருவாக்கியுள்ளார். இதனை ஏ.ஆர். முருகதாஸ் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
 | 

ரம்மி சீட்டில் ரஜினி! வைரலாகும் ரசிகரின் முயற்சி!

நடிகர் ரஜினி காந்தின் 167வது படமான தர்பார், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது.  லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் கதாநாய‌கியாக நயன்தாரா நடித்திருக்கிறார். அனிரூத் இசையமைப்பில், சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.

இந்நிலையில், படத்திற்காக வெளியான ரஜினியின் போஸ்டர்களை கொண்டு பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை உருவாக்கும் வாய்ப்பை இயக்குனர்  ஏ.ஆர். முருகதாஸ் ரஜினி ரசிகர்களுக்கு  கொடுத்திருந்தார். 

அதன்படி ரம்மி விளையாட்டிற்கான  சீட்டில் ரஜினியின் புகைப்படம் இருப்பது போல ரசிகர் ஒருவர் காணொளிக்காட்சியை உருவாக்கியுள்ளார். இதனை   ஏ.ஆர். முருகதாஸ் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில், ரம்மி சீட்டில் ரஜினியின் புகைப்படம் இருப்பது போல உருவாக்கிய ரசிகரையும் இசை வெளியீட்டு விழாவிற்கு தர்பார் படத்தின் இயக்குநர் முருகதாஸ் அழைத்திருந்தார்.

தர்பார் படத்தின் போஸ்டர்களில் ஒன்றாக இந்த புகைப்படமும் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP