இரவில் வீட்டு படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் சைக்கோ.. நடமாடவே அச்சப்படும் பெண்கள்..?

இரவில் வீட்டு படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் சைக்கோ.. நடமாடவே அச்சப்படும் பெண்கள்..?
 | 

இரவில் வீட்டு படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் சைக்கோ.. நடமாடவே அச்சப்படும் பெண்கள்..?

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் உள்ள வீட்டு உரிமையாளர் ஒருவர் தனது வீட்டு சுற்றுப்புறத்தில் அமைக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தார். அதில் சமீப நாட்களாக இரவு நேரங்களில் இளைஞர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வருவதும், அப்பகுதி குடியிருப்புகளில் ஏறி குதித்து ஜன்னல் வழியாக படுக்கை அறை உள்ளிட்டவற்றை எட்டி பார்ப்பதான காட்சிகளை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அந்த வீட்டு உரிமையாளர் தனது பக்கத்து வீடுகளில் உள்ளவர்களுக்கும் தெரியபடுத்தியுள்ளார். பின்னர் அவர்களில் சிலரது வீடுகளில் வைக்கபட்டிருந்த சிசிடிவி காட்சிகளை சோதனையிட்டபோதும் அந்த நபர் வந்து சென்றது தெரிந்தது.

இரவில் வீட்டு படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் சைக்கோ.. நடமாடவே அச்சப்படும் பெண்கள்..?

உடனே அந்த தெரு மக்கள் ஒன்று கூடி துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் போலீசாரிடம் சைக்கோ வந்து சென்ற சிசிடிவி காட்சிகளையும் ஒப்படைத்தனர். புகாரை ஏற்றுக்கொண்ட போலிசார், சிசிடிவியில் இருந்த மர்ம நபரின் டூ வீலர் எண்ணின் அடிப்படையில் அவரை தேடி வருகின்றனர்.

இரவில் வீட்டு படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் சைக்கோ.. நடமாடவே அச்சப்படும் பெண்கள்..?இரவு நேரத்தில் வரும் அந்த நபரால் பொருட்கள் ஏதும் திருப்படவில்லை எனவும் போலீசாரிடம் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளையில் அந்த மர்ம நபர் வீட்டு ஜன்னல்களை மட்டும் திறந்து பார்த்து விட்டு செல்லும் நடவடிக்கையால் அப்பகுதி பெண்கள் இரவில் அச்ச உணர்வுடன் வீடுகளில் முடங்கியுள்ளனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP