அதிமுக அமைச்சருக்கு ரூ500 கோடி சொத்து!  அதிமுக கூட்டத்தில் நோட்டீஸால் பரபரப்பு!

தஞ்சை மாவட்டத்தில் அதிமுகவில் 2 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் எம்.பி. தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராக உள்ளார். வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு வடக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார்
 | 

அதிமுக அமைச்சருக்கு ரூ500 கோடி சொத்து!  அதிமுக கூட்டத்தில் நோட்டீஸால் பரபரப்பு!

ரூ500 கோடிக்கு சொத்து சேர்த்த அமைச்சர் துரைக்கண்ணு மீது நடவடிக்கை எடு என அதிமுகவினர் வெளியிட்ட நோட்டீசால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தஞ்சை மாவட்டத்தில் அதிமுகவில் 2 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் எம்.பி. தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராக உள்ளார். வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு வடக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். வடக்கு மாவட்டத்தில் கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, திருவிடைமருதூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஒட்டுமொத்த தஞ்சை மாவட்டத்தில் அதிமுக தோல்வியை சந்தித்தது. வடக்கு மாவட்டத்திலும் அதிமுகவுக்கு இந்த தேர்தலில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

இந்நிலையில், நேற்று தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் வடக்கு மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, எம்பி வைத்திலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டார். கூட்டத்தில் தீர்மானம் வாசித்து கொண்டிருந்த போது, அமைச்சரின் எதிர்ப்பாளர்கள் விநியோகம் செய்திருந்த பிட் நோட்டீசை அமைச்சர் பார்க்கும்படி படித்து கொண்டிருந்தனர். மேலும், இந்த நோட்டீஸ் பண்டல்கள் மண்டபத்தில் சமையல் அறை, மேடைக்கு அருகே 2 இடங்களில் வைத்திருந்தனர். இதை பார்த்த அமைச்சரின் ஆதரவாளர்கள், மேடைக்கு அருகே போட்டிருந்த 2 பண்டல்களை கைப்பற்றினர். மேலும், அமைச்சருக்கும் தகவல் தெரிவித்ததால் அமைச்சர் உடனே கூட்டத்தை முடித்துக் கொண்டு மண்டபத்தை விட்டு கிளம்பி வெளியே சென்று விட்டார்.

அமைச்சரின் எதிர்பாளர்கள் அந்த நோட்டீஸில், 'அதிமுக தலைமையே திரும்பி பார். உள்ளாட்சித் தேர்தலில் தோல்விக்கு காரணம் தஞ்சை வடக்கு மாவட்ட செaயலாளர் செயல்பாடு இல்லாதது தான். ஜாதி காரனாக பார்ப்பது, ரூ500 கோடிக்கு மேல் சொத்து சேர்த்தது. இவை தான் தோல்விக்கு காரணம். வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டுமா? தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் வேளாண்மை அமைச்சர் மீது நடவடிக்கை எடு. இவண், இதர ஜாதி' என்று அச்சிடப்பட்டிருந்தது.  அமைச்சரும், மாவட்ட செயலாளருமான துரைக்கண்ணுவுக்கு எதிராக அதிமுகவினரே கட்சிக் கூட்டத்தில் நோட்டீஸ் வினியோகித்தது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP