கர்ப்பமாக்கிவிட்டு கொலை மிரட்டல் விடுக்கிறார்.. கதறும் பள்ளி மாணவி.. தூக்கிய மகளிர் போலீஸ்..

கர்ப்பமாக்கிவிட்டு கொலை மிரட்டல் விடுக்கிறார்.. கதறும் பள்ளி மாணவி.. தூக்கிய மகளிர் போலீஸ்..
 | 

கர்ப்பமாக்கிவிட்டு கொலை மிரட்டல் விடுக்கிறார்.. கதறும் பள்ளி மாணவி.. தூக்கிய மகளிர் போலீஸ்..

பொள்ளாச்சியில் பல இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அது தொடர்பான வீடியோ வெளியாகி தமிழகத்தையே உலுக்கியது. அந்த வடு மக்கள் மனதில் இன்னும் ஆறாமல் இருக்கும் நிலையில் மீண்டும் ஒரு கொடூரம் அங்கு நிகழ்ந்துள்ளது. அதாவது ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கர்ப்பமாகியுள்ளார் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. பொள்ளாச்சி ஜோதி நகரில் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருபவர் யாசின். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பயிலும் 16 வயது சிறுமியைக் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி வந்துள்ளார்.

கர்ப்பமாக்கிவிட்டு கொலை மிரட்டல் விடுக்கிறார்.. கதறும் பள்ளி மாணவி.. தூக்கிய மகளிர் போலீஸ்..

இது மட்டுமில்லாமல், அந்த மாணவியைத் தனியே அழைத்துச் சென்று பல முறை உல்லாசமாக இருந்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமானதால் அதிர்ச்சியடைந்த அவர், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு யாசினிடம் கூறியுள்ளார். ஆனால் அதனை ஏற்றுக் கொள்ளாத யாசின், இதனை வெளியே கூறினார் கொலை செய்து விடுவேன் என்று கூறியுள்ளார்.

கர்ப்பமாக்கிவிட்டு கொலை மிரட்டல் விடுக்கிறார்.. கதறும் பள்ளி மாணவி.. தூக்கிய மகளிர் போலீஸ்..

பயந்து போன அந்த சிறுமி யாரிடமும் சொல்லாமல் சிறிது காலம் அனைத்தையும் மறைத்து வந்துள்ளார். பெற்றோரிடம் சொல்ல முடியாமல் தவித்து வந்த சிறுமி, தானாகச் சென்று  பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனே சிறுமியின் பெற்றோருக்குத் தகவல் கொடுத்து வரவழைத்துள்ளனர். அப்போது, சிறுமி நடந்த அனைத்தையும் பெற்றோரிடம் தெரிவிக்க அதிர்ச்சி அடைந்த பெற்றோர் யாசின் மீது புகார் கொடுத்துள்ளனர். இதனையடுத்து யாசின் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP