ரஜினியின் படப் பெயர்களில் அட்டகாசமான வாழ்த்து தெரிவித்த பிரபு.. வைரலாகும் வீடியோ..

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அவரது படங்களின் பெயர்களை கொண்டே அட்டகாசமான பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்த இளைய திலகம் பிரபுவின் வீடியோ வைரலாகி வருகிறது.
 | 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி, ரஜினிகாந்த்தின் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. மேலும், அவருக்கு பல தலைவர்களும், திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

பலர் பலவிதமாக வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனான இளைய திலகம் பிரபுவின் அட்டகாசமான வாழ்த்து வீடியோ ரஜினி ரசிகர்களால் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், திரையுலகம் என்கிற மாபெரும் கோட்டைக்குள் ஒரு சாதாரண வேலைக்காரனா நுழைஞ்சு, மாவீரனா மாறி, தளபதியா உயர்ந்து, மன்னனாகி இன்னைக்கு தமிழ் திரையுலகத்தையே தன்னுடைய பேட்டையா மாத்தி தர்பர் நடத்திக்கிட்டு இருக்கிற என்னுடைய அருமை அண்ணன் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து என ரஜினியின் திரைப்படங்களின் பெயர்களை கொண்டே நடிகர் பிரபு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.

ரஜினியின் படப் பெயர்களில் அட்டகாசமான வாழ்த்து தெரிவித்த பிரபு.. வைரலாகும் வீடியோ..

மேலும், சிவாஜி அப்பாவும் அண்ணன் ரஜினியும் ஒருத்தரை ஒருத்தர் மாறி மாறி புகழ்ந்து கொள்வார்கள் என்றும், மக்களை கவரும் காந்தம் ரஜினியின் கண்களில் இருப்பதாக தந்தை கூறியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ரஜினி அண்ணனை பற்றி புகழ்ந்து பேச நிறைய விஷயங்கள் இருக்கு, ஆனா ரஜினி அண்ணன் புகழ்ச்சிக்கு மயங்குபவர் இல்லை. எளிமை தான் அவரின் சிறப்பு எனவும் பிரபு புகழ்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP