குற்றாலத்தில் குஸ்தி... டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மல்லுக்கட்டு!

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என உயர்நீதிமன்றம் வழங்கிய அதிரடித் தீர்ப்பால் டி.டி.வி.தினகரன் அணிக்குள் ஏற்பட்டுள்ள வாக்குவாதங்களால் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
 | 

குற்றாலத்தில் குஸ்தி... டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மல்லுக்கட்டு!

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என உயர்நீதிமன்றம் வழங்கிய அதிரடித் தீர்ப்பால் டி.டி.வி.தினகரன் அணிக்குள் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. 

குற்றாலத்தில் முகாமிட்டுள்ள தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாகவே வரும் என நம்பிக்கையுடன் காத்திருந்தனர். தங்க.தமிழ்ச்செல்வன் பேசும்போது கூட, ‘எடப்பாடி கே.பழனிசாமியை முதல்வராக சசிகலா அமர வைத்தார். தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்தவுடன் எங்கள் 18 பேரில் யாரை முதல்வர், துணை முதல்வராக பொதுச்செயலாளர்  சசிகலா, துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் சொல்கிறார்களோ அவர்கள் பதவியேற்பார்கள். தீர்ப்பு வந்துவுடன் நேராக கோட்டைக்குச் செல்வோம்’ என பில்டப் கொடுத்தார். 

குற்றாலத்தில் குஸ்தி... டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மல்லுக்கட்டு!

ஆனால், தீர்ப்பு தினகரன் அணியினரை கலங்க வைத்து விட்டது. அதில் ஒரு சில எம்.எல்.ஏக்கள் ‘இடைத்தேர்தலை சந்தித்து மீண்டும் வெற்றி பெறுவது சந்தேகம். ஆகையால் மேல்முறையீட்டுக்கு செல்லலாம். எனக்கூறி வருகிறார்கள் ஒரு தரப்பினர். ஆனால், இன்னும் சிலரோ மேல்முறையீட்டுக்கு சென்று அங்கும் தீர்ப்பு வரத் தாமதமாகலாம். ஒருவேளை அங்கும் தீர்ப்பு செல்லும் என தீர்ப்பு வந்தால், ஏமாற்றமே மீஞ்சும். இடைத்தேர்தலைச் சந்திப்பதுதான் ஒரே வழி’ என்கிறது மறுதரப்பு. தங்க. தமிழ்செல்வன் ஏற்கெனவே தீர்ப்பு பாதகமாக வந்தால் மேல்முறையீட்டுக்கு செல்லமாட்டேன் என வெளிப்படையாகவே கூறியிருந்தார்.  

குற்றாலத்தில் குஸ்தி... டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மல்லுக்கட்டு!

தகுதி நீக்கம் செய்யப்பட்ட அந்த 18  பேரில் மேல் முறையீட்டுக்கு செல்லலாம் எனவும், சிலர் இடைத்தேர்தலை சந்திப்பதே நல்லது எனவும் மாறி மாறி கருத்துக்கூறி வருவதால், அவர்களுக்குள் வாக்குவாதம் நீடித்து வருகிறது. மல்லுக்கட்டாத குறையாக அவர்களுக்குள் எழுந்துள்ள கருத்து வேறுபாடு தினகரனுக்கு தெரிய வர, இப்போதைக்கு நீங்களாக எதுவும் பேசிக்கொள்ள வேண்டாம். பொறுமையாக இருங்கள். அடுத்து என்ன என்பதை தெளிவாக பேசி முடிவெடுக்கலாம் என அறிவுறுத்தி இருக்கிறாராம். அவர்களுக்குள் ஏற்பட்டுள்ள கருத்து மோதல் அணியை சிதைத்து விடுமோ என்கிற கலக்கத்தில் இருக்கிறார் டி.டி.வி.தினகரன்.   

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP