குடியாத்தம், ஆம்பூரில் இடைத்தேர்தல் நடைபெறுமா? : தேர்தல் ஆணையம் விளக்கம்

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு மட்டுமே தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்தொகுதிக்கு உட்பட குடியாத்தம், ஆம்பூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 | 

திமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட இருந்தார். இந்த நிலையில், துரைமுருகன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான பள்ளி, கல்லூரிகளில் வருமானவரித் துறை அண்மையில் அதிரடி சோதனை நடத்தியது.

அதன் தொடர்ச்சியாக, காட்பாடியில் உள்ள திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான சிமென்ட் குடோனிலும் வருமான வரிச் சோதனை நடத்தப்பட்டது. அங்கு கட்டுக்கட்டாக கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகியோர் மீது காட்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

அதைத்தொடர்ந்து, வேலூர் தொகுதியில் பணம் விநியோகம் செய்யப்பட்டுள்ளதால், அங்கு தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நேற்று முன்தினம் பரிந்துரைத்திருந்தார். இந்த நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இந்நடவடிக்கைக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது எனவும் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, "வேலூர் மக்களவைத் தொகுதிக்கு மட்டுமே தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இத்தொகுதிக்கு உட்பட்ட குடியாத்தம், ஆம்பூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஏற்கெனவே அறிவித்தப்படி இடைத்தேர்தல் நடைபெறும்" என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யவிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP