பொதுச் செயலாளராக தினகரனை தேர்வு செய்தது ஏன்?

அமமுகவை கட்சியாக பதிவு செய்யவுள்ளதால் தினகரனை பொதுச் செயலாளராக தேர்வு செய்தோம் என்று, சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
 | 

இதுதொடர்பாக தங்க தமிழ்செல்வன் அளித்த பேட்டியில், உச்ச நீதிமன்ற அறிவுறுதல் அடிப்படையில் அமமுக கட்சியாக பதிவு செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வருகின்ற சட்டமான்ற இடைத்தேர்தலில் பொது சின்னம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக டிடிவி தினகரன் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்’ என்றார்.

மேலும், சசிகலாவை பொறுத்தவரை அவர் ஏற்கனவே அதிமுகவில் பொது செயலாளராக இருக்கிறார். அது தொடர்பான வழக்கு உள்ளது. அமமுகவில் தலைவர் பொறுப்பில் அவர் இருப்பார். துணை தலைவர் பொறுப்பிற்கு வேறொருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார்.
 
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP