தமிழகத்தில் யார் வியூகம் ஜெயித்தது?

அமமுக, நாம் தமிழர் கட்சி, மநீம கட்சிகள் இந்தத் தேர்தலில் நிஜமாகவே குறிப்பிடத் தகுந்தளவு வாக்குகளைப் பெற்றிருக்கின்றன. இதில், அமமுக தவிர மற்ற இருகட்சிகளுக்கும் விழுந்த ஓட்டுகள், தமிழகத்திற்கு ஒரு பெரிய எச்சரிக்கை மணி! சீமான் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரின் அரசியல் பின்புலத்தினை, மத்திய உள்துறை மிகவும் கூர்மையாக கவனிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
 | 

தமிழகத்தில் யார் வியூகம் ஜெயித்தது?

பெரிய கட்சிகள் இரண்டின் வியூகமும் தோற்றது.

முதலாவதாக அதிமுக :

இத்தனை ஆண்டுகாலமாக, அதிமுகவின் தேர்தல் வியூகத்திற்குப் பெயர் போன எடப்பாடி பழனிசாமி அவர்களே, இந்தத் தேர்தலில் முழுவதாக முடிவெடுக்கும் அதிகாரம் பெற்றதாலும், ஜெயலலிதா இல்லாத முதல் பாெதுத் தேர்தல் என்பதாலும், அதிமுக இரண்டாகப் பிரிந்திருந்துக்கும் சூழலில் வந்த முதல் தேர்தல் என்பதாலும், எடப்பாடி பழனிசாமிக்கு இது ஒரு பெரிய அக்கினி பரிட்சை தான். மிகவும் கவனமாக, முடிந்தளவு அனைவரையும் அரவணைத்து நிதானமாகத் தொகுதி பங்கீட்டினைச் செய்தார். 

ஆனால், அவர் கணித்ததில் மிகப் பெரிய தவறு, பாஜகவினைக் கூட்டு சேர்த்தது. உளவுத்துறை ரிப்போர்ட் பொய்த்ததா? இல்லை மோதிப் பார்ப்போம் என்ற அசட்டுத் தைரியமா என்று தெரியவில்லை. மோடி எதிர்ப்பலையினால் அதிகம் பாதிக்கப்பட்டது அதிமுக தான். 

தமிழகத்தில் யார் வியூகம் ஜெயித்தது?

பாஜகவுடன் கூட்டணி இல்லாமல் இருந்திருந்தால், 7-8 தொகுதிகளில் ஜெயித்திருக்க வாய்ப்பிருந்திருக்கும். அதே நேரத்தில், எதிர்பார்த்த அளவில் பாதி அளவு கூட அமமுக, அதிமுகவின் ஓட்டினைப் பிரிக்கவில்லை என்பது அதிமுகவுக்கு கூடுதலாக மனவலிமையைச் சேர்க்கும். 

நிதானத்திற்குப் பெயர் போன இரட்டையர்கள், இனி சட்டமன்றத் தேர்தலை நோக்கி வியூகம் வளர்க்க, இந்தத் தேர்தல் முடிவுகள்  பெரிதும் கை கொடுக்கும்.

திமுக தலைமை :

நாற்பதும் நமதே என்று சொல்லியடித்த கருணாநிதிக்குப் பிறகு, இது குறிப்பிடத்தக்க வெற்றி! ஆனால், இந்த வெற்றியை திமுக தலைமையே கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்பது, அவர்கள் தொகுதிப் பங்கீட்டிலேயே தெளிவாகத் தெரிகிறது. 

நாடு முழுவதும், காங்கிரஸை அதிகாரம் பண்ணி தொகுதிப் பங்கீடு செய்த நேரத்தில், தமிழகத்தில் காங்கிரஸ்க்கு பத்து தொகுதிகள் கொடுத்தது பயத்தின் உச்சம். ஓட்டு வங்கியே இல்லாத கம்யூனிஸ்ட்களுக்கு, நாலு தொகுதிகள். இதெல்லாம் ஒரு பெரிய நம்பிக்கை இல்லாமல் களத்தில் இறங்கியதாக தெளிவாகத் தெரிகிறது. ஆனால், திமுகவின் தேர்தல் உத்தி என்பது தேர்தல் அறிவிப்புக்கு முன்பிருந்தே தொடங்கி விட்டது. 

அதாவது, ஆரம்பத்தில் அண்ணாதுரையும், கருணாநிதியும் பயன்படுத்திய அதே உத்தி தான். எல்லா வகையான ஊடகத்தினையும் தன் கைக்குள் வைத்துக் கொள்வது. அன்றைக்கு அவர்கள் எழுத்து மற்றும் திரை ஊடகங்களை முழுக் கட்டுப்பாட்டில் வைத்து, மக்கள் என்ன செய்தி கேட்கணும் என்று முடிவு செய்தது போலவே, இன்று டிவி மற்றும் எழுத்து  ஊடகங்களை மொத்தமாகத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டனர். 

தமிழகத்தில் யார் வியூகம் ஜெயித்தது?

ஊடகம் முழுவதும், முழுக்க முழுக்க பிரசாரமாகவே இருந்தன. நாடகமாக இருக்கட்டும், செய்தியாக இருக்கட்டும், விவாதமாக இருக்கட்டும் எல்லாவற்றிலும் மறைமுகமான பிரசாரம் தான் நடந்தது. அந்த உத்தியில், அருமையாக வெற்றி பெற்று விட்டனர். ஆனால், இது தேர்தல் வியூகத்தால் கிடைத்த வெற்றி என்று சொல்ல முடியாத நிலையாகிவிட்டது.

இனி தான் ஸ்டாலினுக்கு அக்கினிப் பரீட்சை தொடங்கியிருக்கிறது. கையிலிருக்கும், 38 எம்பிகளை வைத்துக் கொண்டு, தமிழகத்திற்கான தேவைகளை எப்படி  நிவர்த்தி செய்வார்? இந்த எம்பிகளில் பலர் ஸ்டாலின் கட்டுப்பாட்டிற்குள் வராதவர்கள். அவர்களை எப்படி நிர்வாகம் செய்யப் போகிறார்? 

கம்யூனிஸ்ட் எம்பிகளும், காங்கிரஸ் எம்பிகளும் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் செயல்படுவார்களா இல்லை தன் கட்சித் தலைமையில் செயல்படுவார்களா? டிஆர் பாலு, ஜெகத்ரட்சகன், பழனிமாணிக்கம், ராசா, கார்த்தி சிதம்பரம் போன்றவர்களை நிர்வாகம் செய்யும் அளவிற்கு ஸ்டாலின் அவர்களுக்கு நிர்வாகத் திறன் இருக்குமா? வரும் ஆண்டுகளில் பார்ப்போம்.

மூன்றாவதாக,

அமமுக, நாம் தமிழர் கட்சி, மநீம கட்சிகள் இந்தத் தேர்தலில் நிஜமாகவே குறிப்பிடத் தகுந்தளவு வாக்குகளைப் பெற்றிருக்கின்றன. இதில், அமமுக தவிர மற்ற இருகட்சிகளுக்கும் விழுந்த ஓட்டுகள், தமிழகத்திற்கு ஒரு பெரிய எச்சரிக்கை மணி! சீமான் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரின் அரசியல் பின்புலத்தினை, மத்திய உள்துறை மிகவும் கூர்மையாக கவனிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP