அப்பல்லோவில் முதல்வர் பழனிசாமிக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது? 

முதல்வர் பழனிசாமி, முக்கிய கூட்டங்களில் பங்கேற்காமல், உடல் நலப் பரிசாேதனைக்கு சென்றது அதிமுக மட்டுமின்றி, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

அப்பல்லோவில் முதல்வர் பழனிசாமிக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது? 

முதல்வர் எடப்படாடி பழனிசாமி, நேற்றும், இன்றும் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நலப் பரிசோதனை செய்து கொண்டார். இதையடுத்து, அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், முதல்வர் பழனிசாமி, நேற்று முழு உடல் பரிசோதனை செய்து கொண்டதாகவும், இன்று, இதயம் சார்ந்த பரிசாேதனை மேற்காெண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி பூரண உடல் நலத்துடன் இருப்பதாகவும், அவருக்கு மேற்கொள்ளப்பட்டது வழக்கமான உடல் பரிசாேதனை மட்டுமே என, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

தொடர் சுற்றுப் பயணங்களால், முதல்வருக்கு முதுகு வலி ஏற்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், முதல்வர் பழனிசாமி, முக்கிய கூட்டங்களில் பங்கேற்காமல், உடல் நலப் பரிசாேதனைக்கு சென்றது  அதிமுக மட்டுமின்றி, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP