ரஜினி என்ன அரசியல் கட்சி தலைவரா?: முதலமைச்சர் பழனிசாமி

நடிகர் ரஜினிகாந்த் என்ன அரசியல் கட்சித் தலைவரா? வெற்றிடம் என தொடர்ந்து அதையே சொல்லிக்கொண்டிருக்கிறார் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 | 

இதுதொடர்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர், ‘தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்பது இடைத்தேர்தல் மூலம் நிரூபணமாகியுள்ளது.  நடிகர் ரஜினிகாந்த் என்ன அரசியல் கட்சித் தலைவரா? வெற்றிடம் என தொடர்ந்து அதையே சொல்லிக்கொண்டிருக்கிறார். அவர் ஒரு நடிகர். தமிழகத்தில் ஆளுமைமிக்க தலைவர்கள் இல்லை என யார் சொன்னது?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், நாடாளுமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி உள்ளாட்சித் தேர்தலில் தொடரும் என்றும், அதே கூட்டணியுடன் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி, மத்திய, மாநில அரசுகள் இணைந்து தமிழகத்தை சுற்றுலாத் தலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP