மக்கள் நீதி மய்யம் என்ன ஐ.நா சபையா? - ராஜேந்திர பாலாஜி அதிரடி கேள்வி!

மக்கள் நீதி மய்யம் என்ன ஐ.நா சபையா? அவர்கள் சொன்னவுடன் நான் பதவி விலகுவதற்கு.. என்று ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
 | 

மக்கள் நீதி மய்யம் என்ன ஐ.நா சபையா? - ராஜேந்திர பாலாஜி அதிரடி கேள்வி!

"மக்கள் நீதி மய்யம் என்ன ஐ.நா சபையா? அவர்கள் சொன்னவுடன் பதவி விலகுவதற்கு.. " என்று ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். 

அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறியிருந்தார். கமல் இவ்வாறு பேசியதற்கு, அவரது நாக்கை அறுக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருந்தார். 

தொடர்ந்து, கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என்றும் கூறிய ராஜேந்திர பாலாஜிக்கு மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, அவர் அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என்று கூறியது. 

இதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "மக்கள் நீதி மய்யம் என்ன ஐ.நா சபையா? அல்லது ஐ.நா சபையின் அங்கீகாரம் பெற்ற அமைப்பா? அவர்கள் சொன்னதும் நான் பதவி விலகுவதற்கு.. சமூக சீர்கேடை விளைவிக்கும், மக்களிடையே பிரிவினைவாதத்தை தூண்டும் கமலின் கட்சியை ஆணையம் தடை செய்ய வேண்டும்" என்றார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP