உதவி செய்து என்ன புண்ணியம்..? விரக்தியில் அமைச்சர்கள்!

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் அறிவிப்பு நீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகுதான் என முடிவாகி விட்டதால், செய்த உதவிகள் எல்லாம் வீணாய் போய் விட்டதே என அதிமுக தரப்பினர் புலம்பித் தவித்து வருகிறார்கள்.
 | 

உதவி செய்து என்ன புண்ணியம்..? விரக்தியில் அமைச்சர்கள்!

ஜெயலலிதா கைரேகை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால்  திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் அறிவிப்பு இருக்காது என  நியூஸ்டி.எம் செய்தி வெளியிட்டு இருந்தது. 

உதவி செய்து என்ன புண்ணியம்..? விரக்தியில் அமைச்சர்கள்!

அதுதான் இப்போது நடந்து இருக்கிறது. ஆனால், திருவாரூர் தொகுதிக்கு பிப்ரவரி 7ம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த செய்தியை கேட்டதும் திருப்பரங்குன்ற அதிமுகவினர் டென்ஷன் ஆகிக் கிடக்கிறார்கள். ’’இடைத்தேர்தல் வந்தால் பெரிய தொகையை கையில் பார்த்து விடலாம்’’ என நினைத்த தொண்டர்களின் எதிர்ப்பார்ப்பை களைத்து விட்டது தேர்தல் கமிஷன். ’’திருப்பரங்குன்றம் தொகுதிக்கு எப்படியும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விடும்.

உதவி செய்து என்ன புண்ணியம்..? விரக்தியில் அமைச்சர்கள்!

இந்த முறையும் தொகுதியை விட்டுவிடக்கூடாது என லோக்கல் அமைச்சர் பல லட்சம் மதிப்பிலான உதவிகளையும், இலவசங்களையும் வாரி வழங்கினார்கள். ஏராளமான நலத்திட்டங்களும் நிறைவேற்றப்பட்டது. சொல்லாத வாக்குறுதிகள் கூட முழுவீச்சில் ரெடியானது. தமிழகத்திலேயே சமீபத்தில் ஆளுங்கட்சி தரப்பில் நிதிகளை வாரி இறைத்தது  திருப்பரங்குன்றம் தொகுதியில்தான். இப்போது இடைத்தேர்தல் அறிவிப்பு நீதிமன்றத்தீர்ப்புக்கு பிறகுதான் என முடிவாகி விட்டதால், செய்த உதவிகள் எல்லாம் வீணாய் போய் விட்டதே என அதிமுக தரப்பினர் புலம்பித் தவிக்கிறார்கள். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP