பாஜகவை நாங்கள் தோற்கடிக்கவில்லை: ஸ்டாலின் பதில்

பாஜகவை வீழ்த்தவில்லை, தோற்கடித்துள்ளோம் என்றும் அதுவும் நாங்கள் தோற்கடிக்கவில்லை மக்கள் தான் தோற்கடித்துள்ளார்கள் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 | 

பாஜகவை நாங்கள் தோற்கடிக்கவில்லை: ஸ்டாலின் பதில்

பாஜகவை வீழ்த்தவில்லை, தோற்கடித்துள்ளோம் என்றும் அதுவும் நாங்கள் தோற்கடிக்கவில்லை மக்கள் தான் அவர்களைத் தோற்கடித்துள்ளார்கள் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

திருப்பூரில் முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், கருணாநிதிக்கு பிறகு எங்களை வீழ்த்தி வெற்றி பெற்ற தளபதியாக ஸ்டாலின் திகழ்கிறார் என பேசியிருந்தார். 

இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய ஸ்டாலின், "பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மனம் திறந்து பேசியுள்ளார். ஆனால் பாஜகவை வீழ்த்தவில்லை தோற்கடித்துள்ளோம், அதுவும் நாங்கள் அல்ல மக்கள் தான் தோற்கடித்துள்ளார்கள் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், வெளிநாட்டிற்கு முதலமைச்சர் மட்டுமா சென்றுள்ளார். மொத்த படையே சென்றுள்ளது.

அமெரிக்காவிற்கு சென்ற முதலமைச்சர் பழனிசாமி தமிழகத்தில் 220 தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக அப்பட்டமான பொய் ஒன்றை கூறியுள்ளார். 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உண்மையிலேயே முதலீடுகளை பெற்றிருந்தார் என்றால் திமுக சார்பில் நாங்களே அவருக்கு பாராட்டு விழா நடத்த தயங்கமாட்டோம். ஆனால் அவர் அப்படி எதுவும் செய்யவில்லை" என தெரிவித்தார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP