வேலூர் தேர்தல் முடிவை அதிமுகவின் வெற்றியாகவே கருதுகிறோம்: முதலமைச்சர்

வேலூர் மக்களவை தேர்தல் முடிவை அதிமுகவின் வெற்றியாகவே கருதுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 | 

வேலூர் தேர்தல் முடிவை அதிமுகவின் வெற்றியாகவே கருதுகிறோம்: முதலமைச்சர்

வேலூர் மக்களவை தேர்தல் முடிவை அதிமுகவின் வெற்றியாகவே கருதுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சென்னை அண்ணா உயிரியல் பூங்காவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் பழனிசாமி, வேலூர் மக்களவை தேர்தலில் 3 சட்டமன்ற தொகுதியில் 3 தொகுதியில் அதிமுக அதிக வாக்குகள் பெற்றுள்ளதாகவும், இது அதிமுகவிற்கு கிடைத்த மிப்பெரிய வெற்றியாக கருதுவதாகவும் தெரிவித்தார். 

மேலும், உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்றும், உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும் எனவும் கூறினார். நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ளதாகவும், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட முதலமைச்சர், அங்கு அமைச்சர் உதயக்குமார் தலைமையில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP