வேலூரில் நாளை தேர்தல்: காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்

பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது.
 | 

வேலூரில் நாளை தேர்தல்: காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்

பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது.

வேலூரில் ஆண் - 7,01,351 பேரும், பெண் - 7,31,099 பேரும், 3-ஆம் பாலினம் - 105 பேரும் உள்ளனர். வாக்குப்பதிவுக்கு 3,732 மின்னணு எந்திரங்கள், 1,886 கட்டுப்பாட்டு கருவிகளும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் 1988 விவிபாட் கருவிகளும் பயன்படுத்தப்படவுள்ளன. வாக்குப்பதிவுக்காக வேலூர் தொகுதியில் 690 இடங்களில் 1,553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவை முன்னிட்டு வேலூர் தொகுதி முழுவதும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பதற்றமானவை என கருதப்படும் 133 வாக்குச்சாவடியில் துணை ராணுவம், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்கு எந்திரங்கள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, ஆகஸ்ட் 9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP