தவறாமல் வாக்களிக்க வேண்டும்: சி.பி.எம். வேட்பாளர் பி.ஆர். நடராஜன்

இளம் வாக்காளர்கள், புதிய வாக்காளர்கள் என அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த பிறகு சி.பி.எம். வேட்பாளர் பி.ஆர். நடராஜன் வேண்டுகோள் விடுத்தார்.
 | 

தவறாமல் வாக்களிக்க வேண்டும்: சி.பி.எம். வேட்பாளர் பி.ஆர். நடராஜன்

இளம் வாக்காளர்கள், புதிய வாக்காளர்கள் என அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என மக்களவைத் தேர்தலில் வாக்களித்த பிறகு சி.பி.எம். வேட்பாளர் பி.ஆர். நடராஜன் வேண்டுகோள் விடுத்தார்.

17-வது நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இதில், 97 மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் 38 தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதிக்கான தேர்தல் இன்று நடக்கிறது.

இதனுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் நடந்து வருகிறது. கோவையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கோவை மக்களவைத் தேர்தலில் சி.பி.ஐ.(எம்) பி.ஆர்.நடராஜனும், அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ஜ.க.வின் சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் உள்பட 14 பேர் போட்டியிட்டுள்ளனர். 

கோவை நாடாளுமன்ற வேட்பாளர் பி.ஆர். நடராஜன் சரியாக 7.23 மணியளவில் தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் வந்திருந்து அரசு தொழில்நுட்ப கல்லூரியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பி.ஆர். நடராஜன் கூறுகையில், “இந்த ஜனநாயக நாட்டில் நடைபெறும் தேர்தல் திருவிழா இது. இளம் வாக்காளர்கள், புதிய வாக்காளர் என அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக தமிழக மக்களின் உரிமைகளை பறித்த பா.ஜ.க. ஆட்சியை அகற்றிட சுத்தி அரிவாள் சின்னத்தில் தனக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும். யாருக்கு வாக்களித்தோம் என வி.வி.பேட் இயந்திரம் 6 வினாடிகள் காண்பிக்கிறது. அது சரியாக செயல்படுகிறது. இதனை  நான் வரவேற்கிறேன்”என்றார்.


newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP