விஷுவல் மீடியா நக்சல்கள் பிடியில் சிக்கியுள்ள தமிழகம்!

இந்த ஊடங்களின் சார்பில் களத்தில் இருந்தவர்கள் யாரும் எந்த துறையிலும் நிபுணர்களாக இல்லாவிட்டால் கூட, தொலைக்காட்சி நிறுவன அறைகளில் இருந்த விஜெகள் மனதில் தோன்றிய கேள்விளுக்கு எல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் அவை சமாளிப்புகளாகவும், தங்கள் தொலைக்காட்சி எந்தவிதமான பதிலை ஏற்கும் என்று அறிந்து சொன்னவையாகத்தான் இருந்தது.
 | 

விஷுவல் மீடியா நக்சல்கள் பிடியில் சிக்கியுள்ள தமிழகம்!

தமிழத்தின் மற்ற பகுதிகளைப் போலவே கடந்த 25ம் தேதி நடுக்காட்டுப்பட்டியிலும் விடிந்தது. அன்று மாலை 5.30 மணிக்கு முன்பு வரை 80 மணி நேரம் உலகம் பஸ் வசதிகூட போதுமானதாக இல்லாத அந்த குக்கிராமத்தை கவனிக்கப் போகிறது என்பது யாருக்கும் தெரியாது.

அந்த கிராமத்தை சேர்ந்த பிரிட்டோ ஆரோக்கியராஜ் மகன் சுஜித் வில்சன், அவர்கள் வீட்டு தோட்டத்தில் மூடாமல் கிடந்த ஆழ்துளைக்கிணற்றில் விழுந்து விடுகிறார். சுமார் 25 அடியில் சிக்கிய அந்த குழந்தையின் அழுகுரல் கேட்டு அவன் தாய் தேடிய போது, அவர்கள் தோண்டி கைவிடப்பட்ட நிலையில் இருந்து ஆழ்துளை கிணற்றில் சிறுவன் விழுந்தது தெரிந்தது. 

இதையடுத்து மணப்பாறை தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அது முடியாமல் போகவே, உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்த அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, திருச்சி கலெக்டர் சிவராசு, திருச்சி மாவட்ட எஸ்பி ஜியாவுல் ஹக்  அனைவரும் சம்பவ இடத்தை தற்காலிக முகாம் அலுவலகமாக மாற்றுகின்றனர்.  

விஷுவல் மீடியா நக்சல்கள் பிடியில் சிக்கியுள்ள தமிழகம்!

அமைச்சர்கள் அதிகாரிகள் அங்கு சென்றதும் அரசு இயந்திரம் முழுவதும் அந்த கிராமத்தை சூழ்கிறது. இதைத் தவிர கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறும் இந்த சோகத்தால் இதற்கு தீர்வு காண வேண்டும் என்று தங்களால் முடிந்த கண்டுபிடிப்புகளை செய்த மதுரை மணிகண்டன், ராஜ்குமார், திருச்சி டேனியல், கோவை பேராசியர் ஸ்ரீதர், மணப்பாறை ரூபன்குமார், நாமக்கல் வெங்கடேசன், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் செந்தில் என்று தன்னார்வலர்கள் குழு வந்து இறங்கி, தங்களுக்கு தெரிந்த அளவிற்கு முயற்சிகளை மேற்கொண்டனர். 

ஆனால் நேரம் செல்ல செல்ல குழந்தையின் உடல் லேசாக சுருங்கத் தொடங்கியது. இதனால் ஏற்பட்ட இடைவெளியில், குழந்தை ஆழத்திற்கு பயணித்தது. இதைத் தொடர்ந்து மாநில பேரிடர் மீட்புக்குழு, தேசிய பேரிடர் மீட்புக்குழு, என்எல்சி, ஓஎன்ஜிசி, மருத்துவர்கள், மண்ணியல் நிபுணர்கள் என்று அனைத்து தரப்பினரும் அங்கு வந்தனர். குழந்தையை உயிருடன் மீட்க வேண்டும் என்ற பொறுப்புடன் அதிர்வுகளை குறைத்து பணி தொடர்ந்து இரவு பகல் பாராமல் நடந்து கொண்டிருந்தது.

ஆழ்துளை கிணற்றில் விழந்த தகவல் கிடைத்ததும், தொலைக்காட்சி ஊடகங்கள் நேரடிக்காட்சிகளை ஒளிபரப்ப தொடங்கின. நேரம் செல்ல செல்ல நேரலையில் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்கு பதிலாக அவநம்பிக்கையை ஊட்டும் தகவல்களையே ஒளிபரப்பின. 

ஒவ்வொரு முற்றசியில் தடை ஏற்படும் போது, இவர்கள் அரங்கில் அமர்ந்து கொண்டு களத்தில் இருப்பவர்கள் முட்டாள்கள் என்பது போல கருத்துக்களை பரவ விட்டுக் கொண்டிருந்தனர். இவர்கள் அழைத்து பேசி ஆலோசனை செய்தவர்கள், நான் இந்த ஊரில் விழுந்த குழந்தையை மீட்டேன் என்று சொல்லும் தகுதி படைத்தவர்கள் அல்ல. 

வாங்குகும் காசுக்கு தங்கள் வாய்க்கு வந்ததை ஆலோசனையாக அள்ளிவீசி சென்றனர். இதைப் பார்த்த மக்கள் இவரு சொன்ன படி செய்து இருக்கலாமோ என்று எண்ணி அதிமுக ஆட்சியில் இருப்பதால் தான் இப்படி எங்க ஆட்சி என்றால் பிள்ளை விழுந்து இருக்கவே மாட்டான் என்ற அளவிற்கு பில்டப் வளர்ந்தது.

விஷுவல் மீடியா நக்சல்கள் பிடியில் சிக்கியுள்ள தமிழகம்!

இவர்கள் ஒளி பரப்பியதை நடுகாட்டுப்பட்டியில் களத்தில் இருந்தவன் பார்தால், ஏண்டா நாங்க வேலையும் செய்து விட்டு கெட்ட பெயர் வாங்க வேண்டுமா என்ன ம…வுக்டா என்று வெளியேறி இருப்பான். ஆனால் அங்கு டிவி பார்க்கும் வசதி இல்லாதததால் தொடர்ந்து முழுவீச்சில் பணி நடந்தது. 

ரிக்குகள் வந்து துளை தோண்டும் பணி தொடங்கியது. அவற்றின் முனை உடைந்ததும், முறை மாற்றி வேறு வகையில் பணி தொடர்ந்து கொண்டிருந்தது.

இவர்களை பாராட்டி இருக்க வேண்டும். இத்தனை முயற்சி மேற்கொண்ட அரசை உற்சாகப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அவற்றை செய்ய மறந்து மக்கள் மனதில் அவநம்பிக்கை விதைக்கும் பணியை செழுமையாக செய்தன.

இந்த ஊடங்களின் சார்பில் களத்தில் இருந்தவர்கள் யாரும் எந்த துறையிலும் நிபுணர்களாக இல்லாவிட்டால் கூட, தொலைக்காட்சி நிறுவன அறைகளில் இருந்த விஜெகள் மனதில் தோன்றிய கேள்விளுக்கு எல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் அவை சமாளிப்புகளாகவும், தங்கள் தொலைக்காட்சி எந்தவிதமான பதிலை ஏற்கும் என்று அறிந்து சொன்னவையாகத்தான் இருந்தது. 

ஒரே வார்த்தையில் ஊடகத்தின் நோக்கத்தை சொல்ல வேண்டும் என்றால் ஒன்றுக்கும் உதவாத அரசு இது என்று நிலைநாட்டும் முயற்சியாகவே ஒவ்வொரு சம்பவத்தையும் தொலைக்காட்சிகள் அணுகுகின்றன.

ஆனால் தமிழக அரசின் சிறப்பான பணி இது. இந்த பணியை ஒருங்கிணைக்க வருவாய்துறை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் வரவழைக்கப்பட்டார். உண்மையில் அவர் யார் என்று இந்த ஊடகங்கள் உலகிற்கு வெளிச்சம் இட்டு காட்டிருந்தால் கடைசி நிமிடம் வரை மக்கள் நம்பிக்கையுடன் இருப்பார்கள். ஏதோ ஒரு ஆபீசர் என்ற நிலையில் தான் பலருக்கு ஊடகங்கள் அறிமுகம் செய்தன.

தமிழகத்தில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திய சுனாமியின் போது மீட்பு பணிகளை ஒருங்கிணைத்தவர் ராதாகிருஷ்ணன். அதில் பாதிக்கப்பட்டவர்கள் ஒருவரை கூட விட்டு விடாமல் அவர்களை 3 ஆண்டுகள் பாதுகாத்து பயனாளிகளாக மாற்றி முழுமையாக நிவாரணம் கிடைக்க செய்தவர். அதில் கட்டிங் பார்க்காமல் கை சுத்தத்துடன் வேலை செய்த அதிகாரி. இந்த சம்பவத்தின் மீட்பு பணிக்கு அவரை நியமித்தது தமிழக அரசின் திறனைக் காட்டுகிறது.

இதே போல பொதுப்பணித் துறை அதிகாரிகள் தங்களின் அனுபவங்களை ஆலோசனைகளாக வழங்கினார்கள்.
இந்த சம்வத்தில் நான் முயற்சி செய்கிறேன் என்று களத்தில் இருந்தும் பல வேறு தகவல் தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் ஆலோசனைகளை ஏற்று, அவற்றை நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை செய்து மீட்பு பணியில் பல குழுக்கள் ஈடுபட்டன.

ஆனால் எந்த ஒரு தொழில்நுட்பமாக இருந்தாலும் அதற்கு இயல்பான கால அவகாசம் வேண்டும். அதே நேரத்தில் குழிக்குள் இருந்தது 2 வயது குழந்தை அது காற்றை மட்டும் சுவாசித்து குடிநீர், உணவு போன்ற எதுவும் இல்லாமல் உடலை அசைக்க கூட வழியில்லாமல் எத்தனை நேரம் தான் உயிரை தாக்கு பிடித்துக் கொண்டு இருக்க முடியும். 

இந்த சூழ்நிலையின் காரணமாக குழந்தை இறந்துவிட்டது. மனிதனின் மீட்பு முயற்சிகள் வெற்றி பெற வேண்டிய நேரத்தில் இயற்கை அதற்கு சோகமான முடிவுரை எழுதியது. குழந்தை இறந்து விட்டது என்பது உறுதியான சில மணி நேரத்தில் ஆழ்துளைக்கிணற்றில் இருந்து சடலம் மீட்கப்பட்டது என்கிற நிலையில் அதை உயிருடன் மீட்க எத்தகு போராட்டம் நடத்தது என்பதை அறிய முடியும்.

ஆனால் இதை ஊடங்கள் அரசின் தோல்வியாகவும், தொழில்நுட்பத்தின் தோல்வியாகவும் சித்தரித்தது. இவர்களின் ஒரே நோக்கம் இந்த நாட்டின் மீதும், அரசின் மீது நம்பிக்கை இழப்பை ஏற்படுத்துவது என்பதுதான். இதை அவர்கள் ஒரு குழுவாக சேர்ந்து செய்கிறார்கள். இதன் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து ஆய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.

அதே நேரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, திமுக எம்பி திருச்சி சிவா, முன்னாள் அமைச்சர் பொன்ராதாகிருஷன்ணன், தமாக தலைவர் வாசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் பாலகிருஷ்ணன்  என்று அனைத்து அரசியல் தலைவர்களும் நடுக்காட்டுப்பட்டிக்கு வந்து மீட்பு பணியை பார்த்துள்ளனர்.

அவர்களையும் கூட மீடியாக்கள் தங்களுக்கு சாதகமாக அரசுக்கு எதிராக பேசவைத்தது தான் சோகம். இந்த அரசியல் வாதிகள் இன்று அதிமுக ஆட்சி செய்யலாம். ஆனால் நாளை வரப் போவது உங்களில் ஒருவரின் ஆட்சியாக கூட இருக்கலாம். அப்போது இந்த காலகட்டத்தில் ஊடங்கள் மக்கள் மனதில் விதைத்த அவநம்பிக்கை, அரசுக்கு எதிரான எண்ணம் போன்றவற்றை அறுவடை செய்ய வேண்டியது நீங்கள் தான். அதை உணர்ந்து இப்போதே ஊடங்களின் சதிக்கு அவர்கள் பலியாகாமல் இருக்க வேண்டும்.

புரட்சி என்ற பெயரில் சொந்த மக்களையும், பொது சொத்துக்களையும் சேதம் விளைவுக்கும் நக்சல்கள் பயங்கரமானவர்கள். அதை விட களத்தில் இறங்காமலேயே பயங்கரவாதத்தை துாண்டிவிடும் அர்பன் நக்சல்கள் மிகவும் மோசனமானவர்கள். ஆனால் களத்தில் இறங்கியோ, களத்தில் இறங்காமலோ மக்கள் மனங்களில் அவநம்பிக்கையை விதைத்து, தேசப்பற்றை குறைத்து அதில் காசு பார்க்கும் இந்த ஊடக  நக்சல்கள் பயங்கர மோசனமானவர்கள்.

அவர்கள் கையில் தமிழகம் சிக்கி கொண்டு இருக்கிறது. இதை மீட்க வேண்டிய கடமை ஒவ்வொரு பார்வையாளருக்கும் உள்ளது. இது தான் சுஜீத் சம்பவம் கொடுக்கும் பாடம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP