சீன அதிபர் வருகை: ஸ்டாலின் வரவேற்பு

தமிழகத்திற்கு வருகை தரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்கிறோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 | 

சீன அதிபர் வருகை: ஸ்டாலின் வரவேற்பு

தமிழகத்திற்கு வருகை தரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்கிறோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வருக, வருக என மனமார வரவேற்கிறோம். பிரதமர் நரேந்திரமோடி, சீன அதிபர் ஜின்பிங் நடத்தும் இருநாட்டு நல்லுறவுப் பேச்சுவார்த்தை தமிழகத்தில் நடப்பது பெருமை தரத்தக்கது. பல்லவர்களின் துறைமுகப் பட்டினமாக விளங்கிய மாமல்லபுரத்திற்கு சீன அதிபர் வருகை தருவது, இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது. தமிழகத்துக்கும் சீனாவுக்குமான பண்பாட்டு உறவுகள், வணிகத் தொடர்புகள் மன்னராட்சிக் காலங்களில் இருந்தே தொடர்கிறது. இந்திய - சீன நல்லுறவுப் பேச்சுவார்த்தை நடத்த தமிழகத்தை தேர்வு செய்த மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துகொள்கிறேன்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP