விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியில்லை

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியில்லை

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது. இடைத்தேர்தல் எனும் ஊழல் நாடகத்தில் மக்கல் நீதி மய்யம் பங்கெடுக்காது. 2021-இல் ஆட்சிப் பொறுப்பினை கைப்பற்ற மக்கள் நீதி மய்யம் முனைப்போடு விரைவாக முன்னேறி வருகிறது’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடாது என்று டிடிவி தினகரன் அறிவித்ததை தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் கட்சியும் போட்டியிடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்த தொகுதிகளில் மும்முனைப்போட்டி மட்டுமே நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP