தி.மு.க-வுக்குள் கை வைத்த விஜயபாஸ்கர்... கருணாநிதி மீது சத்தியம் செய்ய சொன்ன தொண்டர்கள்!

புதுக்கோட்டை பகுதியில் உள்ள தி.மு.க எம்.எல்.ஏக்கள் சிலரும் விஜயபாஸ்கருடன் நல்ல நட்பில் இருந்து வருகின்றனர். அப்படி புதுக்கோட்டை, தி.மு.க., - எம்.எல்.ஏ., பெரியண்ணன் அரசு, விஜயபாஸ்கருடன் தொடர்பில் இருந்து வருகிறார்.
 | 

தி.மு.க-வுக்குள் கை வைத்த விஜயபாஸ்கர்... கருணாநிதி மீது சத்தியம் செய்ய சொன்ன தொண்டர்கள்!

’பகை மூலம் பயன்கொள்’ என்பதைக் கச்சிதமாக உணர்ந்தவர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். தன்னை மீறி எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக எதிர்க்கட்சியினரையும் தன் கைக்குள் போட்டுக்கொள்வதில் வல்லவர். 

தி.மு.க-வுக்குள் கை வைத்த விஜயபாஸ்கர்... கருணாநிதி மீது சத்தியம் செய்ய சொன்ன தொண்டர்கள்!

குட்கா ஊழலால் அவர் பதவி விலகவேண்டும் என எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, அதிமுகவிலேயே பலமாக குரல்கள் ஒலிக்கத்தொடங்கின. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் கட்சியிலும் முக்கியப்பொறுப்பை பெற்று எதிராளிகளை வாயடைக்க வைத்தார் விஜயபாஸ்கர். அமைச்சர் பதவி பறிபோகும் என எதிர்பார்த்திருந்தவர்களுக்கு போனஸாக கட்சியில் மற்றொரு பதவி பெற்று அதிர்ச்சி கொடுத்தார் விஜயபாஸ்கர். ’எங்கே தட்டினால் எப்போது விழும்... எங்கே முட்டினால் எப்போது எழும்’ என்கிற வித்தை அவருக்குக் கைவந்த கலை. 

தனது மாவட்டமான புதுக்கோட்டை பகுதியில் உள்ள தி.மு.க எம்.எல்.ஏக்கள் சிலரும் விஜயபாஸ்கருடன் நல்ல நட்பில் இருந்து வருகின்றனர். அப்படி புதுக்கோட்டை, தி.மு.க எம்.எல்.ஏ பெரியண்ணன் அரசு, விஜயபாஸ்கருடன் தொடர்பில் இருந்து வருகிறார். தி.மு.க-வுக்குள் கை வைத்த விஜயபாஸ்கர்... கருணாநிதி மீது சத்தியம் செய்ய சொன்ன தொண்டர்கள்!

இந்த நட்புக்கு செக் வைக்கும் விதத்தில் சில தினங்களுக்கு முன் தீர்மானம் நிறைவேறி இருக்கிறது புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. அக்கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம், சமீபத்தில், தனித்தனியாக நடந்தது. இரு கூட்டங்களிலும், சொல்லிவைத்தாற்போல் ஒரே தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள். அதாவது, ’'எக்காரணத்திற்காகவும், அ.தி.மு.க-வினருடன், தி.மு.க.,வினர் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்று, கருணாநிதி மேல் சத்தியம் செய்து, உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள்.

தி.மு.க-வுக்குள் கை வைத்த விஜயபாஸ்கர்... கருணாநிதி மீது சத்தியம் செய்ய சொன்ன தொண்டர்கள்!

தி.மு.க தலைவர் ஸ்டாலின் உத்தரவுப்படியே, இந்த தீர்மானத்தை போடப்பட்டதாகக் கூறுகிறார்கள். அதாவது தி.மு.க எம்.எல்.ஏ பெரியண்ணன் அரசு அமைச்சர் விஜயபாஸ்கர் நட்பைத் துண்டிக்க வேண்டும் என்பதை உணர்த்தவே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகப் புதுக்கோட்டை தி.மு.க-வினரே பேசிக்கொள்கிறார்கள். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP