பரவும் அமைச்சர்களின் வீடியோ... அதிரும் எடப்பாடி பழனிசாமி!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் நிவாரணத்தை அமைச்சர்கள் வீடியோ, புகைப்படம் எடுத்து வெளியிடக்கூடாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளது அமைச்சர்களை ஆத்திரப்பட வைத்துள்ளது.
 | 

பரவும் அமைச்சர்களின் வீடியோ... அதிரும் எடப்பாடி பழனிசாமி!

கடந்த 20ம் தேதி கஜா புயல் பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதன்பிறகு மீண்டும் செல்லவே இல்லை. இதனால், டெல்டா பகுதி மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் காரைக்கால் விரைவு ரயில் மூலம் நாகைக்கு கிளம்பி விட்டார். 

ரயில் பயணத்திற்கு காரணம், விமானத்தில் முதல் முறை சென்று பார்வையிட்டதை, எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்தன. மீண்டும் விமானத்தில் சென்று பார்வையிட்டால் அது மேலும் அவப்பெயரை ஏற்படுத்தி விடும். காரில் பயணம் செய்தால் ஆங்காங்கே மக்கள் மறியலில் ஈடுபடுவார்கள். நாகை உள்ளிட்ட பகுதிகளை சென்றடையவே முடியாது. ஆகையால் ரயிலில் பயணம் செய்து அங்கிருந்து உட்பகுதிகளுக்கு காரில் செல்லலாம் என உளவுத்துறை எடுத்துக் கூறியிருக்கிறது.  எடப்பாடியின் இந்த விசிட்டுக்கு மக்கள் கோபமாக இருப்பது ஒரு காரணம் என்றாலும் அமைச்சர்கள் அவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்களாம். 

பரவும் அமைச்சர்களின் வீடியோ... அதிரும் எடப்பாடி பழனிசாமி!

அமைச்சர் ஜெயகுமார் புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல்மேல்குடிக்கு அருகே உள்ள பிள்ளையார் திடல் என்ற இடத்தில் நிவாரணப் பொருட்களை வழங்கினார். இதனை ஜெயகுமார் ஆதரவாளர்கள் வீடியோ மற்றும் படங்களாக பரப்பினார்கள். முதல்வர் பார்வைக்கும் இந்தப் படங்கள் போயிருக்கிறது. உடனடியாக அமைச்சர்களை தொடர்புகொண்டு, ‘அங்கே களத்தில் இருந்து சீரமைப்பு பணிகளில் ஈடுபடுவது தொடர்பான படங்கள் இருந்தால் செய்தி மக்கள் தொடர்பு துறை மூலமாகவே வெளியிடலாம். ஆனால், நிவாரணப் பொருட்கள் கொடுப்பதையோ, உணவு கொடுப்பதையோ படம் எடுக்கவே வேண்டாம். நாம போட்டோ எடுக்கிறோம், வீடியோ எடுக்கிறோம்னு தெரிஞ்சா அந்த மக்கள் கைநீட்டி வாங்க கூச்சப்படுவாங்க. 

பரவும் அமைச்சர்களின் வீடியோ... அதிரும் எடப்பாடி பழனிசாமி!

நாம கையேந்தி நிற்பது நாளைக்கு போட்டோவுல வந்துட்டா என்ன செய்யுறது என்ற எண்ணம் அவங்களுக்குள் இருக்கும். அதனாலேயே பலரும் வராமல் இருப்பாங்க. முடிந்த வரை அந்த மக்களுக்கு சாப்பாடு கொடுக்கிறதை மட்டும் படம் எடுக்க வேண்டாம்னு சொல்லுங்க...’ எனக் கூறியிருக்கிறார். முதல்வரின் இந்த உத்தரவு அங்குள்ள அமைச்சர்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் பல அமைச்சர்கள் கோபமாக இருக்கிறார்கள். ’’ கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில மக்களை நாம சமாளிக்கணும். பாராட்டு  அவருக்கு மட்டும் கிடைக்கணும்னு நினைக்கிறார்  அவர் இப்போ வரும்போது, யாருக்காவது நிவாரணம் கொடுக்கும் போது போட்டோ எடுத்துக்குறாரா இல்லை, வேண்டாம்னு பெருந்தன்மையா போறாரான்னு பார்க்கிறேன்...’ என ஒரு அமைச்சர் கடுகடுத்திருக்கிறார்.

 பரவும் அமைச்சர்களின் வீடியோ... அதிரும் எடப்பாடி பழனிசாமி!

மற்றொரு அமைச்சர், ‘படம் எடுத்து விளம்பரம் தேடிக்க நான் என்ன அவரு மாதிரி போட்டோகிராபரை கூடவா கூட்டிட்டுப் போறேன். நான் கொடுக்கிறதை யாரோ எடுத்துப் போட்டுறாங்க. அதையெல்லாம் நாங்க பார்த்துட்டு இருக்க முடியுமா? என்று புலம்பித் தீர்த்துவிட்டாராம்.
‘அவரை இங்கே வாங்கனு எத்தனையோ முறை சொல்லி ஒருவாரம் கழித்து இப்போதான் வர்றாரு. நமக்கு மட்டும் இதை பண்ணாதே... அதைப் பண்ணாதேன்னு சொல்லிட்டு இருக்காரு. பிரச்சினைகள் சமாளிக்கிற அளவுதான் இருக்கு வாங்கண்ணு சொல்லியும் அவரு, நாங்க சொல்றதை கேட்காமல் உளவுத் துறை சொல்றதை மட்டுமே கேட்டுகிட்டு இருக்காரு. மக்கள்கிட்ட நமக்கு நல்ல பேரு வாங்க கிடைச்ச பெரிய வாய்ப்பை கோட்டை விட்டுட்டு இப்போ வர்றாரு’ எனப்புலம்பித் தவித்திருக்கிறார் தென் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர்.  

அமைச்சர்களுக்குள் இருக்கும் இந்த கோபம், இப்படியே விட்டால் வெடித்துக் கிளம்பி நேரடியாக முதல்வரிடமே காட்டினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP