வேலுார் தேர்தல்: அதிமுக - திமுக வேட்பு மனுக்கள் ஏற்பு

வேலுார் லாேக்சபா தேர்தலில், அதிமுக கூட்டணியின் சார்பில், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் மற்றும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
 | 

வேலுார் தேர்தல்: அதிமுக - திமுக வேட்பு மனுக்கள் ஏற்பு

வேலுார் லாேக்சபா தேர்தலில், அதிமுக கூட்டணியின் சார்பில், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் மற்றும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். 

லோக்சபா பொதுத்தேர்லின் போது, பணப்பட்டுவாடா காரணமாக, வேலுாரில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது, அங்கு, அடுத்த மாதம் 5ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், திமுக நேரடியாகவும், அதிமுக அதன் கூட்டணி கட்சி வேட்பாளரையும் களம் இறக்கியுள்ளது. 

திமுக பொருளாளர் துரைமுருகனின் மகனும், தொழில் அதிபருமான கதிர் ஆனந்த் அந்த கட்சியின் சார்பில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தார். அதே போல், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தார். 

இவர்கள் தவிர, மேலும் சில சுயேட்சை வேட்பாளர்களும் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதற்கிடையே, கதிர் ஆனந்த்தின் மனு மீது, சுயேட்சை வேட்பாளர் ஒருவர் ஆட்சேபனம் தெரிவித்ததால், அவரது மனு பரிசீலனை செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், திமுகவினர் கொதிப்படைந்தனர். 

அதே போல், ஏ.சி.சண்முகத்தின் மனு மீதும் சிலர் ஆட்சேபனம் தெரிவித்ததால், அவரது மனுவை பரிசீலிப்பதிலும் தாமதம் ஏற்பட்டது. முக்கிய அரசியல் கட்சிகளின் சார்பில் களம் இறக்கப்பட்ட ஸ்டார் வேட்பாளர்களின் மனுக்கள் பரிசீலனையில் நிறுத்தி வைக்கப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. 

இரு கட்சித் தொண்டர்களும், வேலுார் கலெக்டர் அலுவலக வளாகத்தில் குவிந்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அனைத்து மனுக்களையும் பரிசீலித்த பின், கதிர் ஆனந்த் மற்றும் சண்முகத்தின் மனுக்கள் ஏற்கப்பட்டதாக, தேர்தல் அதிகாரி அறிவித்தார். இதையடுத்து, இரு கட்சித் தொண்டர்களும் உற்சாகமடைந்தனர். 

சில மணிநேரம் நீடித்த பதற்றம் தணிந்து, அப்பகுதியில் மகிழ்ச்சி கொண்டாட்டம் காணப்பட்டது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP