Logo

விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் வேலூர் மக்களவை தேர்தல்!

வேலூர் தொகுதி மக்களவை தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
 | 

விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் வேலூர் மக்களவை தேர்தல்!

வேலூர் தொகுதி மக்களவை தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

நாடுமுழுவதும் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 7 கட்டங்களக மக்களவை தேர்தல் நடைபெற்றது. அப்போது வேலூரில் பணப்பட்டுவாடா செய்வதாக எழுந்த புகாரை அடுத்து வேலூர் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவை தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதலே மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.    

வேலூரில் ஆண்கள் - 7,01,351 பேரும், பெண்கள் - 7,31,099 பேரும், 3-ஆம் பாலினத்தவர் - 105 பேரும் உள்ளனர். வாக்குப்பதிவுக்கு 3,732 மின்னணு எந்திரங்கள், 1,886 கட்டுப்பாட்டு கருவிகளும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் 1988 வி.வி.பேட் கருவிகளும் பயன்படுத்தப்படவுள்ளன. வாக்குப்பதிவுக்காக வேலூர் தொகுதியில் 690 இடங்களில் 1,553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவையொட்டி வேலூர் தொகுதி முழுவதும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பதற்றமானவை என கருதப்படும் 133 வாக்குச்சாவடியில் துணை ராணுவம், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்கு இயந்திரங்கள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, ஆகஸ்ட் 9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP