வேலூர் மக்களவை தேர்தல்: வாக்கு எண்ணிக்கை, சதவீதம்!

வேலூர் மக்களவை தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள் மற்றும் சதவீதம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
 | 

வேலூர் மக்களவை தேர்தல்: வாக்கு எண்ணிக்கை, சதவீதம்!

வேலூர் மக்களவை தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள் மற்றும் சதவீதம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

வேலூர் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி சண்முக சுந்தரம் அதிகாரப்பூர்வமாக மாலை அறிவித்தார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அதிகாரி சண்முகசுந்தரம் கதிர் ஆனந்திடம் வழங்கினார்.

அதிமுக கூட்டணி வேட்பாளார் ஏ.சி.சண்முகத்தை விட 8,141 வாக்குகள் அதிகம் பெற்று கதிர் ஆனந்த் வெற்றிபெற்றுள்ளார்.  சதவீத கணக்கில் கணக்கிட்டால் 0.79 சதவீத வாக்குகள் வித்தியாசத்திலேயே ஏ.சி.சண்முகம் தோல்வியைத் தழுவியுள்ளார் எனத் தெரிய வந்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை 

* திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் - 4,85,340 வாக்குகள்

* அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் - 4,77,199 வாக்குகள்

* நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தீபலெட்சுமி - 26,995 வாக்குகள் 

* நோட்டா -  9,417 வாக்குகள் 

வாக்கு சதவீதம்

* திமுக - 47.30%

* அதிமுக - 46.51%

* நாம் தமிழர் - 2.63%

* நோட்டா - 0.92% 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP