வேலூர் தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி உறுதியானது!

வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
 | 

வேலூர் தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி உறுதியானது!

வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார். 

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில், வேலூர் தவிர இதர 38 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிவுகளும் வெளியானது. 

பணப்பட்டுவாடா நடைபெற்றதன் காரணமாக, வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து, வேலூர் தொகுதிக்கான மறுதேர்தல் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற்றது. இதில் மொத்தம் 71.51% வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தமுள்ள 14,32,555 வாக்காளர்களில் 10,24,352 பேர் வாக்களித்துள்ளனர்.

இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வாலாஜாபேட்டை ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் இன்று காலை 8 மணிக்குத்  தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வந்தார். பிற்பகலில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றார். 

இறுதியில் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில், கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP