ஒரு ஊழியர் கூட வேலை இழக்க மாட்டார்கள்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி 

பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படுவதால், ஒரு ஊழியர் கூட வேலை இழக்க மாட்டார்கள் என்றும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு அதிக மூலதனம் தரப்படுவதால், வங்கிகள் மூடப்படும் என்பது தவறான தகவல் என்றும், சென்னை கலைவாணர் அரங்கத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்தபோது உறுதியளித்துள்ளார்.
 | 

அமைச்சரின் பேட்டியில் மேலும், ‘வாகன உற்பத்திக்கான ஜிஎஸ்டியை குறைப்பது என் கைகளில் இல்லை, அது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில்தான் முடிவெடுக்க முடியும். வாகன உற்பத்தித் துறையில் தேக்கம் ஏற்பட்டு 3.5 லட்சம் பேர் வேலை இழந்திருப்பதாக கூறப்பட்டதற்கு எந்தவித புள்ளி விவரமும் இல்லை. தங்கத்தின் மீது இந்தியாவில் அதிக ஈர்ப்பு உள்ளது; உலக நாடுகளின் முதலீடுகளை பொறுத்தே தங்கத்தின் விலை அதிகரிக்கிறது’ என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP