தூத்துக்குடியில் நாளை வேட்புமனுத்தாக்கல் செய்கிறார் கனிமொழி!

திமுக மகளிர் அணிச் செயலர் மற்றும் மாநிலங்களவை எம்.பியாக இருக்கும் கனிமொழி, தூத்துக்குடி மக்களவை தொகுதியில் நாளை வேட்புமனுத்தாக்கல் செய்யவுள்ளார்.
 | 

தூத்துக்குடியில் நாளை வேட்புமனுத்தாக்கல் செய்கிறார் கனிமொழி!

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி, நாளை வேட்புமனுத்தாக்கல் செய்யவுள்ளார். 

திமுக மகளிர் அணிச் செயலர் மற்றும் மாநிலங்களவை எம்.பியாக இருக்கும் கனிமொழி, கடந்த 12 ஆண்டு கால அரசியல் வரலாற்றில்  முதல்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் வருகிற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்த நிலையில் அதனை ஏற்று, கனிமொழிக்கு தூத்துக்குடி தொகுதியை ஒதுக்கீடு செய்து திமுக தலைமை அறிவித்தது. 

இதையடுத்து, அவர் தூத்துக்குடியில் தீவிரதேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், தூத்துகுடியில் நாளை வேட்புமனுத்தாக்கல் செய்ய இருப்பதாக கனிமொழி தகவல் வெளியிட்டுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP