காரசாரம் தூவப்போகும் தமிழிசை... தாக்குப்பிடிப்பாரா டி.டி.வி தினகரன்?

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் என்கிற தீர்ப்பு வெளிவந்த பிறகு சசிகலா குடும்பத்தினரை கடுமையாக விமர்சிக்க தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு டெல்லி மேலிடம் அறிவுறுத்தி இருப்பதாகக் கூறுகிறார்கள்.
 | 

காரசாரம் தூவப்போகும் தமிழிசை... தாக்குப்பிடிப்பாரா டி.டி.வி தினகரன்?

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்கிற தீர்ப்பு வந்த பிறகு சசிகலா குடும்பத்தினரை கடுமையாக விமர்சிக்கக் கூறி தமிழக பா.ஜ.க நிர்வாகிகளுக்கு டெல்லி மேலிடம் அறிவுறுத்தி இருப்பதாகக் கூறுகிறார்கள்.

காரசாரம் தூவப்போகும் தமிழிசை... தாக்குப்பிடிப்பாரா டி.டி.வி தினகரன்?

அதி.மு.க எம்.பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை  சில மாதங்களாக பாஜகவை விமர்சிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். ஆனால், இது பற்றி தமிழக பாஜக நிர்வாகிகள் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. இந்த நிலையில்,  தகுதி நீக்கம் செய்யப்பட்ட, 18 எம்.எல்.ஏ.,க்கள் வழக்கில், ஆளுங்கட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வந்துவிட்டதால்,  தமிழக பா.ஜ.க, தலைவர் தமிழிசைக்கு, தேசியத் தலைவர் அமித் ஷா தரப்பில் 'கிரீன் சிக்னல்' கொடுக்கப்பட்டுள்ளது.  அதாவது, சசிகலா, தினகரன், திவாகரன் என அனைவரையும், அரசியல் ரீதியாக கடுமையாக விமர்சிக்க சொல்லி உத்தரவிட்டு இருக்கிறாராம்.

காரசாரம் தூவப்போகும் தமிழிசை... தாக்குப்பிடிப்பாரா டி.டி.வி தினகரன்?

 டி.டி.வி.தினகரனை சில நாட்களாக தமிழிசை கடுமையாக சாடுவதன் பின்னணி இதுதான் என்கிறார்கள் என்கிறார்கள் பாஜக நிர்வாகிகள். கடந்த சில வாரங்களுக்கு முன் டி.டி.வி.தினகரன் தன்னிடம் தூது விட்டதாக கூறியிருந்தார் தமிழைசை. ஆனால், ’தமிழிசை யாரென்றே தெரியாது’ என டி.டி.வி. தினகரன் பதிலளித்தார். சிக்னல் வருவதற்கு முன்பே இப்படி காரசார மோதல் நடந்தது. அடுத்து நடக்கப்போகும் வார்த்தைப்போரில் காரம் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும்’ என்கிறார்கள் அரசியர் ஆர்வலர்கள்.  

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP