வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்: தேர்தல் அதிகாரி விளக்கம்

தேனியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றியதாக திமுக, காங்கிரஸ், அமமுக கட்சியினர், தேனி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 | 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்: தேர்தல் அதிகாரி விளக்கம்

தேனியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றியதாக திமுக, காங்கிரஸ், அமமுக கட்சியினர், தேனி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து, அவர்களுடன் ஆட்சியர் பல்தேவ் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறார்.

இதனிடையே, இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யர்பிரதா சாஹூ விளக்கம் அளித்தார். 

அந்த விளக்கத்தில், ‘பயன்படுத்தப்படாத வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றுவது வழக்கமான  நடைமுறைதான். தேவை கருதியே தேனி, ஈரோட்டிற்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன. ஒருவேளை மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டால் இயந்திரங்கள் தேவை என்பதாலும் மாற்றப்பட்டிருக்கும். மேலும் சில வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம். 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோவையில் இருந்து தேனிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP