திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்... டி.எம்.சவுந்தரராஜனுக்கு சிலை?

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலையொட்டி மறைந்த திரைப்பட பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜனுக்கு மதுரையில் சிலை வைக்க வேண்டும் என்கிற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது.
 | 

மதுரையில பிறந்தவர், டி.எம்.சவுந்தரராஜன். சிவாஜி, எம்.ஜி.ஆர். ஜெமினி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் மற்றும் நாகேஷ் உட்பட பல முன்னணி திரைப்பட நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் பொருத்தமான தனித்தனி குரலில் பாடி, அந்த நடிகர்களின் முகத்தை தனது குரலின் மூலம் ரசிகர்களின் மனக்கண்ணில் நிலைநிறுத்தும் ஆற்றல் படைத்தவர். வீரம், காதல், சோகம், துள்ளல், தத்துவம், நையாண்டி மற்றும் கிராமிய மணம் கமழும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களையும், 2500-க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார்.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்... டி.எம்.சவுந்தரராஜனுக்கு சிலை?

முருகக் கடவுள் மீது இவர் பாடிய ‘முத்தைத் திருபத்தித் திருநகை’ எனும் பாடல் முருக பக்தர்களால் இன்றளவும் மறக்க முடியாது.
இருதய கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு மே மாதம் 25-ம் தேதி சென்னையில் காலமானார். சவுராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்த இவருக்கு, மதுரையில் சிலை வைக்க வேண்டும் என அந்த சமுதாய அமைப்பினர், பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்... டி.எம்.சவுந்தரராஜனுக்கு சிலை?

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், தேர்தல் வாக்குறுதியாக டி.எம்.சவுந்திரராஜனுக்கு மதுரையில் சிலை அமைப்பது குறித்து  அறிவிக்க வேண்டும் என ஆளுங்கட்சியினருக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள் சவுராஷ்டிர இன மக்கள். அனைவரையும் செவிசாய்க்க வைத்த டி.எம்.சவுந்தரராஜனுக்கு சிலை வைக்க எடப்பாடி அரசு செவிசாய்க்குமா..? 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP