பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு இல்லை: தேர்தல் அதிகாரி

பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வாய்ப்பில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
 | 

பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு இல்லை: தேர்தல் அதிகாரி

பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வாய்ப்பில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு சத்யபிரதா சாஹூ அளித்த பேட்டியில், ‘சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பொன்பரப்பியில் வாக்குப்பதிவின்போது பிரச்னைகள் ஏற்படவில்லை என ஆட்சியர் அறிக்கை அளித்துள்ளார். ஆட்சியரின் அறிக்கையின்படி பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வாய்ப்பு இல்லை. அங்கு மறுவாக்குப்பதிவு நடத்த எந்த அரசியல் கட்சியும் கோரிக்கை வைக்கவில்லை’ என்றார்.

மேலும், மதுரை வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட மையத்தில் தாசில்தார் சென்றது குறித்து முன்னாள் தேர்தல் அதிகாரி அறிக்கை அளித்துள்ளார் என்றும் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.
 
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP