அமமுக நான் ஆரம்பித்த கட்சியென கூறியதில் மாற்றம் இல்லை: புகழேந்தி

அமமுக நான் ஆரம்பித்த கட்சியென கூறியதில் எந்த மாற்றமும் இல்லை எனவும், இதற்கு டிடிவி தினகரன் தான் பதிலளிக்க வேண்டுமெனவும் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
 | 

அமமுக நான் ஆரம்பித்த கட்சியென கூறியதில் மாற்றம் இல்லை: புகழேந்தி

அமமுக நான் ஆரம்பித்த கட்சியென கூறியதில் எந்த மாற்றமும் இல்லை எனவும், இதற்கு டிடிவி தினகரன் தான் பதிலளிக்க வேண்டுமெனவும் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு,  மாலை அணிவித்து மரியாதை செலுத்திய புகழேந்தி, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, "அமுமுகவில் இருந்து தன்னை டிடிவி தினகரன் நீக்கிவிட்டதாக சொல்லவில்லை என்றும், அமமுகவில் தொண்டர்களுக்கு அநீதி ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்ட செயலாளர் தவறான தகவல் அளித்ததால் பலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்றே கூறியதாகவும் தெரிவித்தார். 

அமமுக தொண்டர்கள் கொத்துகொத்தாக கட்சியில் இருந்து வெளியேறி வருவதாக கூறிய அவர், கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என வலியுறுத்தினார். அமமுக மாவட்ட செயலாளர்கள் தோற்றுபோய் விட்டதாகவும், மண்டல பொறுப்பாளர்களால் கட்சி பாதி அழிந்து விட்டது எனவும் கூறிய அவர், நாளுக்கு நாள் தொய்வு அடைந்து வரும் கட்சியை டிடிவி தினகரன் சரி செய்யாதது வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.

வேறு கட்சியில் இணைவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என தெரிவித்த அவர்,  அமமுக தான் ஆரம்பித்த கட்சியென ஆதங்கத்தில் கூறியதாகவும், கட்சிக்காக அவ்வளவு கஷ்டப்பட்டுள்ளேன் என்பதால் அப்படி சொல்லியதாகவும், இதற்கு டிடிவி தினகரன் தான் பதிலளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க தயார் எனவும், விசாரணைக்காக டிடிவி தினகரன் இதுவரை அழைக்கவில்லை எனவும் குறிப்பிட்ட புகழேந்தி, அமமுக எனது கட்சி என்று சொல்லியதில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்தார். சசிகலாவிற்கு ஆதரவாக முதல் முதலாக குரல் கொடுத்தது நான் தான் என்றும், இல்லையெனில் டிடிவி தினகரன் எங்கியிருப்பார் என்பதை மனசாட்சி இருந்தால் அவரே சொல்லட்டும் எனவும் அவர் கூறினார்.

முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மாதிரியான ஆட்கள் இயக்கத்தை அழிக்க வந்தவர்கள். இது டிடிவி தினகரனுக்கு தெரியும் என கூறினார். சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக புத்தகம் எழுத உள்ளதாகவும், அதில் பல உண்மைகள் வெளிவரும் எனவும் தெரிவித்த அவர், நவம்பரில் வரும் உள்ளாட்சி தேர்தலில் களம் காண்போம் என கூறினார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP