மேல்முறையீடு இல்லை; 100% இடைத்தேர்தலுக்கும் தயார் - தங்கத் தமிழ்ச்செல்வன்

தகுதி நீக்க வழக்கில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும், அதே நேரத்தில் 100% இடைத்தேர்தலுக்கும் தயார் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்கத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
 | 

மேல்முறையீடு இல்லை; 100% இடைத்தேர்தலுக்கும் தயார் - தங்கத் தமிழ்ச்செல்வன்

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும், அதே நேரத்தில் 100% இடைத்தேர்தலுக்கும் தயார் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்கத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை இல்லை எனக்கூறி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் ஆளுநரிடம் தனித்தனியே கடிதம் அளித்தனர். இதையடுத்து, அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டதாக அதிமுக கொறடா பரிந்துரையின் பேரில் சபாநாயகர் தனபால்  18 எம்.எல்.ஏக்களையும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தகுதி நீக்கம் செய்வதாக அறிவித்தார். இதை எதிர்த்து  18 எம்.எல்.ஏக்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் தீர்ப்பை ஒத்தி வைத்தது. இதையடுத்து இன்று பகல்  மணிக்கு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகமே பரபரப்பாக இந்த தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இந்த தீர்ப்பின் மூலம் தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்கத்தமிழ்செல்வன் இன்று செய்தியாளர்களை சந்திக்கையில், "இந்த வழக்கில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். நீதியையும், நீதிமன்றத்தையும் முழுமையாக நம்புகிறோம். சாதகமாக தீர்ப்பு வந்தால் உடனடியாக நாங்கள் சட்டப்பேரவைக்கு சென்று ஜனநாயக கடமையை பணியாற்றுவோம். அதே நேரத்தில் தகுதி நீக்கம் செல்லும் என்று அறிவித்தால் இடைத்தேர்தலுக்கும் 100% தயாராக உள்ளோம்.மேல்முறையீடு எதுவும் செய்யும் எண்ணம் இல்லை. நாங்கள்18 பேரும் அதே தொகுதியில் நின்று அமோக வெற்றி பெறுவோம். நாங்கள் 'அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்' என்ற வழியில் தனியாக போய்க்கொண்டிருக்கிறோம். எங்களுக்கு சசிகலா தான் பொதுச்செயலாளர். தினகரன் தான் துணைப் பொதுச் செயலாளர். நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். வேறு எந்த திசையையும் நோக்கி செல்லவில்லை. இடைத்தேர்தலில் ஒருவர் தோல்வி அடைந்தால் கூட 17 பேரும் ராஜினாமா செய்வோம்" என தெரிவித்தார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP