ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி: கதிர் ஆனந்த்!

வேலூர் மக்களவை தேர்தலின் வெற்றி, ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
 | 

ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி: கதிர் ஆனந்த்!

வேலூர் மக்களவை தேர்தலின் வெற்றி, ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்ற பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘இந்த வெற்றி திமுக தலைவர் ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. வேலூர் தொகுதியில் கிடைத்த வெற்றியை கருணாநிதிக்கு காணிக்கையாக செலுத்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

வேலூர் தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளார் ஏ.சி.சண்முகத்தை 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் தோற்கடித்தார். கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகளும், ஏ.சி.சண்முகம் 4,77,199 வாக்குகளும் பெற்றனர்.

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தீபலெட்சுமி 26,995 வாக்குகள் பெற்றார்; நோட்டவுக்கு 9,417 வாக்குகள் கிடைத்துள்ளன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP