அதிமுகவிற்கு பிரச்சனை என்றால் சிப்பாயாக நின்று காப்போம்: புகழேந்தி

அதிமுக ஆட்சிக்கு பிரச்சனை ஏற்பட்டால் சிப்பாய்களாக நின்று காப்பாற்றுவோம் என அமமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி கூறியுள்ளார்.
 | 

அதிமுகவிற்கு பிரச்சனை என்றால் சிப்பாயாக நின்று காப்போம்: புகழேந்தி

அதிமுக ஆட்சிக்கு பிரச்சனை ஏற்பட்டால் சிப்பாய்களாக நின்று காப்பாற்றுவோம் என அமமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி கூறியுள்ளார். 

கோவையில் அமமுக அதிருப்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய புகழேந்தி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பின்னல் இனி பயணிக்க முடியாது என்றும் நமது கனவுகள் பொய்த்து விட்டதாகவும் தெரிவித்தார். இனி தினகரனால் அரசியலில் நிலைத்து நிற்க முடியாது என்றும், இரட்டை இல்லை சின்னத்தை டிடிவி தினகரன் இழிவுபடுத்தி பேசுவதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார். 

இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் அமமுக போட்டியில்லை என்றால் டிடிவி தினகரன் யாரிடம் விலைபோனார் என கேள்வி எழுப்பிய புகழேந்தி, அதிமுகவிற்கோ, ஆட்சிக்கோ பிரச்சனை ஏற்பட்டால் சிப்பாய்களாக நின்று காப்பாற்றுவோம் என கூறினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP