ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்பதே மக்கள் விருப்பம்: பூண்டி கலைவாணன்

திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்பதே தொகுதி மக்களின் விருப்பமாக உள்ளது என அம்மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் தெரிவித்துள்ளார்.
 | 

ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்பதே மக்கள் விருப்பம்: பூண்டி கலைவாணன்

திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்பதே தொகுதி மக்களின் விருப்பமாக உள்ளது என அம்மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் தெரிவித்துள்ளார். 

திருவாரூர் தொகுதிக்கு வருகிற ஜனவரி 28ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில், இன்று திருவாரூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் உள்ள தொடங்கிய நிலையில், ஸ்டாலின், திமுக செயலாளர்  பூண்டி கலைவாணன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் போட்டியிட விருப்பமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் யார்? என்பது குறித்து திமுகவில் தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. தற்போது போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் தங்கள் விருப்ப மனுக்களை அளித்து வருகிறார்கள். இந்த நிலையில் திருவாரூரில் போட்டியிட திமுக சார்பாக பலர் விருப்ப மனுக்கள் அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.

இன்று காலையிலேயே இதற்காக சிலர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். திமுக தலைவர் ஸ்டாலின் அதிகமானோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். தொடர்ந்து திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் சார்பாகவும், அதேபோன்று ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் மீதும் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

இதுகுறித்து பேசிய திருவாரூர் மாவட்ட திமுக செயலர் பூண்டி கலைவாணன், "திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்பதே தொகுதி மக்களின் விருப்பமாக உள்ளது. திமுக ஆலோசனை நடத்தி தலைவர் ஸ்டாலின் யாரை வேட்பாளராக நிறுத்துகிறாரோ அவரை வெற்றி பெற வைப்போம்' என தெரிவித்துள்ளார். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP