ஆன்லைனில் மட்டுமே இனி சினிமா டிக்கெட்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்பனை செய்யும் முறை விரைவில் அமலுக்கு வரவுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
 | 

ஆன்லைனில் மட்டுமே இனி சினிமா டிக்கெட்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்பனை செய்யும் முறை விரைவில் அமலுக்கு வரவுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, அமமுக கட்சியை ஒரு இயக்கமாகவோ, எங்களுக்கு போட்டியாகவோ நினைக்கவில்லை என தெரிவித்தார். முதலமைச்சரின் வெளிநாடு பயணம் குறித்து பேசும் திமுக தலைவர் ஸ்டாலின் எதற்காக வெளிநாடு சென்றார் என வெள்ளை அறிக்கை விட வேண்டும் என கூறினார்.

விரைவில், ஆன்லைனில் மட்டும் சினிமா டிக்கெட் விற்பனை செய்யும் முறை அமலுக்கு வரவுள்ளதாகவும், திரையரங்கில் உணவுப் பொருட்களுக்கு கட்டணம் நிர்ணயம்  செய்யப்பட்டு விரைவில் அமல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP