அதிமுகவின் செல்வாக்கு சரிந்து வருகிறது: ஸ்டாலின் பேச்சு!

தற்போது சட்டமன்ற இடைத் தேர்தலில் ஆட்சியில் உள்ள கட்சிகள் தான் வெற்றி பெற்று உள்ளது என்றும் அதிமுகவின் செல்வாக்கு சரிந்து வருகிறது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 | 

சேலத்தில் நடைபெற்ற விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார். அப்போது அவர், "வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது நாடாக இருக்கட்டும் என்ற வாழ்ந்த கலைஞர் சிலை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ளது. 5 முறை முதல்வர் மற்றும் இந்திய நாட்டிற்கு பல பிரதமர் மற்றும் ஜனாதிபதியையும் உருவாக்கி கொடுத்துள்ளார்.

திராவிட கழகத்தின் கொடியில் உள்ள வட்ட வடிவிலான சிகப்பு உருவாக்கியதில் கருணாநிதிக்கு அதிக  பங்கு உண்டு. சேலத்தில் கருணாநிதி பணியாற்றி கொண்டிருந்த போது தான் திமுக உதயமாகிறது.

அதிமுகவின் செல்வாக்கு சரிந்து வருகிறது: ஸ்டாலின் பேச்சு!

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி, மக்களின் பிரச்சினை பற்றி சிறிதும் சிந்தித்து பார்க்காத ஆட்சி. எந்த ஒரு துணையும் இல்லாமல் ஒரு கிராமத்திற்கு வந்தால் உங்களை அடையாளம் காண முடியுமா என்று பார்ப்போம். பிரிப்பதை தவிர வேறு எதாவது செய்கிறீர்களா? மாவட்டங்கள் பிரிப்பது முறையாக மக்களிடம் கருத்து கேட்க வேண்டும். 

நாங்கள் வெற்றி பெற்றால் மிட்டாய் கொடுத்து வெற்றி பெற்றோம் என்று கூறுகிறார் முதல்வர். தேனியில் ஒரு தொகுதி மட்டும் அதிமுக வெற்றி எவ்வாறு வெற்றி பெற்றது?

தற்போது சட்டமன்ற இடைத் தேர்தலில் ஆட்சியில் உள்ள கட்சிகள் தான் வெற்றி பெற்று உள்ளது. அதை முறியடித்து நடந்து முடிந்து இடைத்தேர்தல் 13 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம்" என்று கூறினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP