ஆளுநர் பதவி தமிழிசையின் கடும் உழைப்புக்கு கிடைத்தது: ஈவிகேஎஸ்

தமிழிசை சௌந்தரராஜனுக்கு ஆளுநர் பதவி கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் EVKS இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
 | 

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். அவருடன் பல்வேறு கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும், அவர் நல்ல துணிச்சலான நபர் என்றும் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் கூறினார். 

தமிழிசைக்கு ஆளுநர் பதவி கொடுப்பது கமிஷனுக்கு புறம்பானது என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், புதுச்சேரி முதலமைச்சர் அவருடைய கருத்த கூறியிருப்பதாகவும், என்னை பொருத்தவரை பாஜகவில் கடுமையாக உழைத்த உழைப்புக்கு கிடைத்திருப்பதாக தெரிவித்தார். 

வங்கிகள் இணைப்பு குறித்த கேள்விக்கு, இதன் மூலமாவது மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்று நம்புகிறேன். வங்கிகளை இணைப்பதால் மட்டுமே மக்களுக்கு முழுமையான சேவை கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என பதிலளித்தார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP