டாஸ்மாக் விற்பனை இலக்கு நிர்ணயிக்கும் அரசு உரம் கையிருப்புக்கு இலக்கு நிர்ணயிக்கவில்லை: முத்தரசன்

டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கும் அரசு, உரம் கையிருப்புக்கு இலக்கு நிர்ணயிக்கவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
 | 

கும்பகோணத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலில் இணைவதை விட இருவரும் திரைப்படத்தில் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்தார். மத்திய அரசு பொதுத் துறைகளை தனியார் மயமாக்குவது கண்டிக்கத்தக்கது என கூறிய அவர், இந்த செயல் பொருளாதாரத்தை மிகவும் சீர்குலைத்து விடும் என்றும், உள்ளாட்சி மன்றத் தேர்தலை மறைமுகமாக நடத்தக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

மேலும், தீபாவளி பண்டிகையின்போது டாஸ்மாக் விற்பனை குறித்து இலக்கு நிர்ணயித்த தமிழக அரசு உரம் கையிருப்பு குறித்து இலக்கு நிர்ணயிக்க தவறிவிட்டது என்றும், உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முத்தரசன் வலியுறுத்தினார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP