அஸ்தமனத்தின் அடையாளமா விக்கிரவாண்டி தேர்தல் முடிவு!

ஒருக்கால் அதிமுக சரியான விதத்தில் தேர்தல் பணியை கொண்டு செல்லாமல் தோற்று இருந்தால், திமுக குறிப்பாக ஸ்டாலின் கிளப்பிய ஜாதி அரசியல் தான் வெற்றியை தேடித்தந்தது என்ற கருத்து பரவி இருக்கும். அந்த சூழ்நிலையில் சட்டசபைத் தேர்தலிலும் அந்த நிலைப்பாட்டை திமுக எடுக்கும், அதற்கு பதில் அளிக்கும் விதமாக மற்ற கட்சிகளும் அதே பாதையில் பயணம் செய்தும்.
 | 

அஸ்தமனத்தின் அடையாளமா விக்கிரவாண்டி தேர்தல் முடிவு!

தமிழகத்தின் உள்ளாட்சி, சட்டசபைத் தேர்தல்களின் முன்னோட்டம் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் என்று திமுக தலைவர் ஸ்டாலினே கூறினார். இவற்றில் விக்கிரவாண்டி தொகுதி திமுகவிற்கு முக்கியமானது. அந்த கட்சியின் எம்எல்ஏ ராதாமணி உடல் நலக்குறைவால் இறந்ததால் இந்த இடைத் தேர்தல் வந்தது. அதை விட திமுகவிற்கு உதயசூரியன் என்ற சின்னம் கிடைக்க காரணமான தொகுதி இது தான்.

சுந்திரத்திற்கு முன்பு வன்னியர்கள் புறக்கணிப்படுவதாக எண்ணினார்கள். இதனால் வன்னியர் குல சத்திரியர் சங்கம் என்று எஸ்எஸ் ராமசாமி படையாச்சியார் ஒரு அமைப்பை ஏற்படுத்தினார். இதன் செயலராக கோவிந்தசாமி பொறுப்பேற்றார். 1949ம் ஆண்டு தேர்தலில் ராமசாமி படையாச்சி வெற்றி பெறறார். பின்னர் காங்கிரஸ் கட்சி வன்னியர்களை கண்டு கொள்ளவில்லை என்ற எண்ணம் ஏற்படுகிறது. 

1950களில்,  வட ஆற்காடு மாவட்டத்தில் சேர்ந்தவவர்கள் காமன்வீல் கட்சியையும், தென்னாற்காடு வன்னியர்கள் தமிழ்பாடு உழைப்பாளர் கட்சியையும் தொடங்கினர். இந்த கட்சிகள் 1952 ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிக வெற்றியை பெற்றது.

இதன் பின் காங்கிரஸ் கட்சி வன்னியர்களை அரவணைத்தது. இதில் வெறுப்பு அடைந்த கோவிந்தசாமி திமுகவிற்கு ஆதரவு கரம் நீட்டினார். பின்னர் திமுக தேர்தலில் போட்டியிடலாம் என்ற முடிவு எடுத்த பின்னர் தான் பல முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற உதயசூரியன் சின்னத்தை, திமுகவிற்கு வழங்கினார். பின்னர் அவர் திமுகவில் இணைந்து அமைச்சர் பதவி வகித்து, இறந்தது தனி வரலாறு.

பாட்டாளி மக்கள் கட்சி தோன்றும் வரை பல வன்னியர் சங்கங்கள் இருந்தன. அவற்றில் பெரும்பாலான சங்கங்கள் ஒன்றாக சேர்ந்து பாமக உருவெடுத்தது. 

ஆனால் அதன் பிறகு பல முறை திமுக ஆட்சி பொறுப்பில் இருந்தது. பல தேர்தல்கள் நடந்தன. வேலுார் லோக்சபா தொகுதி இடைத்தேர்தல் வரை கூட திமுக கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் கட்டுவதை பற்றி பேசவே இல்லை. இதே நேரத்தில் ராமசாமி படையாச்சி பிறந்த நாளை அரசு விழாவாக நடத்த முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். 

இதன் காரணமாக திமுக தலைவர் ஸ்டாலின் வன்னியர்கள் ஓட்டை கவர வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். அதற்கு ஏற்ப அவரும் கூட ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு என்ற அறிவிப்பையும், கோவிந்தசாமிக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.

இந்த கருத்தை சீமான் சொல்லி இருந்தால் கூட அந்த தொகுதி மக்கள் ஏற்று இருப்பார்கள். ஆனால் 1987ம் ஆண்டு பாமக தலைவர் ராமதாஸ் தலைமையில் உள் ஒதுக்கீடு கோரி நடந்த போராட்டம், அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 21 பேர் பலியான சோகம், 1989ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த திமுக தலைவர் கருணாநிதி வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு என்ற கோஷத்திற்கு பதிலாக 108 சமுதாயத்தை சேர்ந்தவர்கள் . மிகவும் பிற்படுத்தப்பட்ட படியலில் இணைத்து 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதும். அதற்காக வன்னியர்கள் நடத்திய போராட்டமும் தான் மக்கள் மனதில் நின்றது.

தேவையில்லாமல் வன்னியர்கள் மனதில் அடங்கி கிடந்த உள் ஒதுக்கீட்டு கோரிக்கையை ஸ்டாலின் தட்டி எழுப்பியது, அவருக்கு எதிராகவே திரும்பியது.

இன்னொருபுறம் அசுரன் திரைப்படத்தை பார்த்துவிட்டு பஞ்சமி நில மீட்பு குறித்து ஸ்டாலின் சொன்ன கருத்தை ராமதாஸ் சரியனா விதத்தில் பயன்படுத்திக் கொண்டு திமுகவிற்கு எதிராக அவர்களை திருப்பி விட்டார்.

அதையும் மீறி திமுக, அதிமுக ஆகிய இரு சக்திகளை மீறி தேமுதிக  பொதுச்செயலாளர் விஜயகாந்தை வெற்றி பெற வைத்தவர்கள் இப்பகுதியினர் அவரும் தன் உடல்நிலையை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இது போன்ற சில சில காரணங்களால் திமுக வரலாறு காணாத தோல்வியை இந்த தொகுதியில் சந்தித்தது.

ஒருக்கால் அதிமுக சரியான விதத்தில் தேர்தல் பணியை கொண்டு செல்லாமல் தோற்று இருந்தால், திமுக குறிப்பாக ஸ்டாலின் கிளப்பிய ஜாதி அரசியல் தான் வெற்றியை தேடித்தந்தது என்ற கருத்து பரவி இருக்கும். அந்த சூழ்நிலையில் சட்டசபைத் தேர்தலிலும் அந்த நிலைப்பாட்டை திமுக எடுக்கும், அதற்கு பதில் அளிக்கும் விதமாக மற்ற கட்சிகளும் அதே பாதையில் பயணம் செய்தும். 

மீண்டும் தமிழகத்தில் ஜாதி அரசியல் தலைதுாக்கி ஆட இதுவே காரணமாக மாறிவிடும். அது தமிழகத்திற்கு நல்லதாக இருக்காது. அந்த வகையில் தொடங்கிய இடத்திலேயே திமுக தோல்வியடைந்தது தமிழகத்தின் அமைதிக்கு கிடைத்த வெற்றி.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP