அந்த 7 பேரை சுற்றி வரும் ஓட்டு  பாசம்!

இன்றைக்கு இவர்களை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் அரசியல் கட்சிகள், நாங்கள் தமிழர்கள் தமிழின துரோகி ராஜீவ் அவரை நாங்கள் தான் கொன்றோம் என்று மார்தட்டும் சீமான் போன்வறவர்கள் உண்மையில் தமிழர்கள் மேல் உள்ள பாசத்தால் தான், 7 பேர் விடுதலையை அரசியலாக்குகிறார்களா? என்ற கேள்வி நடக்கிறது.
 | 

அந்த 7 பேரை சுற்றி வரும் ஓட்டு  பாசம்!

ராஜீவ் காந்தி 1991ம் ஆண்டு மே 21ம் தேதி ஸ்ரீபெரும்புதுாரில் மனித வெடிகுண்டு உதவியால் கொல்லப்படுகிறார்.  சுமார் 20 நாட்கள் கடந்து பேரறிவாளன் கைது செய்யப்படுகிறார். அதைத் தொடர்ந்து நளினி, முருகன், சாந்தன் கைது செய்யப்படுகிறார்கள். அவர்களுடன் சேர்த்து 26 குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள். 

முக்கிய குற்றவாளி என அடையாளம் காட்டப்பட்ட பிரபாகரன் இந்த வழக்கில் இருந்து பிரிக்கப்படுகிறார். மற்றவர்கள் மீது வழக்கு நடக்கிறது.1998ம் ஆண்டு ஜனவரி மாதம் 26 பேருக்கும் துாக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது. பின்னர் அப்பீலில் 19 பேர் தண்டனைக்காலம் முடிவு பெற்றதாக விடுதலை செய்யப்படுகிறார்கள்.

ராபட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேருக்கும் துாக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்படுகிறது. சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகிய 4 பேரின் துாக்கு தண்டனை உறுதி செய்யப்படுகிறது. அதன் பின்னர் குடியரசு தலைவரின் துாக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு என்றெல்லாம் பலவித முயற்சிகளுக்கு பின்னர் இந்த வழக்கு இன்றளவு தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.

இன்றைக்கு இவர்களை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் அரசியல் கட்சிகள், நாங்கள் தமிழர்கள் தமிழின துரோகி ராஜீவ் அவரை நாங்கள் தான் கொன்றோம் என்று மார்தட்டும் சீமான் போன்வறவர்கள் உண்மையில் தமிழர்கள் மேல் உள்ள பாசத்தால் தான், 7 பேர் விடுதலையை அரசியலாக்குகிறார்களா? என்ற கேள்வி நடக்கிறது.

இலங்கையில் உச்சகட்டப் போர் முள்ளிவாய்காலில் நிறைவு பெற்றது. மே மாதம் 2009ம் ஆண்டு இலங்கைப் போரின் கடைசி அத்தியாயம் முள்ளிவாய்க்காலில் எழுதப்பட்டது. கடைசி கட்டப் போரில் 40 ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்ப்பட்டனர். 

பிரபாகரன், அவர் மகன் ஆகியோர் கொல்லப்பட்டனர். தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்கான போராட்டங்கள் வலுத்தால் கூட அன்று மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சியில் இருந்தவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை. ஏப்ரல் மாதம் 27ம் தேதி 2009ம் ஆண்டு திடீர் என்று கருணாநிதி உண்ணாவிதரம் இருந்தார். 

அது தொடங்கிய சில மணி நேரத்திலேயே மத்திய அரசு  இலங்கையில் போர் நிறுத்தம் நடந்ததாக சொன்ன தகவலை நம்பி அவர் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார். அது என்ன மாயமோ வைகோ விவகாரத்தில் இருந்து இலங்கை பிரச்னை வரை மத்திய அரசு கருணாநிதியிடம் பொய் சொல்லி எளிதில் ஏமாற்றி விடுகிறது. 

மற்ற விஷயங்களில் எல்லாம் ராஜதந்திரியாக இருக்கும் அவர், இது போன்ற விஷயங்களில் ஏமாளியாக மாறிவிடுகிறார். அவர் எப்படியோ போகட்டும். ஆனால் மற்றவர்கள் இதற்கு தீர்வு காணும் வகையில் தங்கள் நடவடிக்கையை முன்னெடுக்காமல் இலங்கை போரின் போது குரல் கொடுக்காத கட்சியை தோளில் சுமக்கிறார்கள்.

அவ்வவு ஏன்? திருச்சி கே.கே நகரில் தான்2003ம் ஆண்டு வரை  பிரபாகரன் பெற்றோர் வசித்தனர். அதன் பிறகு அவர்கள் இலங்கை சென்று விட்டனர். பிரபாகரன் தாய் சிகிச்சைக்காக, 2010ம்  ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழகதிற்கு வந்தார்.  ஆனால் அந்த அம்மையாரை உள்ளே அனுமதிக்கவே இல்லை. 

ஒரு தலைவர் விமானநிலையத்தின் வெளியே காரில் அமர்ந்து இருந்து பார்வதியம்மாள் திரும்பி சென்ற பின்னர் கிளம்பி சென்றார்.ஒட்டு மொத்தமாக பார்க்கப் போனால் இலங்கை தமிழர்களுக்கு தமிழகம், இந்திய அரசு தரும் ஆதரவு ஒரு இழை கூட உதவி செய்யவில்லை. 

ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் அவர்களை வைத்து அரசியல் செய்வில்லை. ஆனால் அவர்கள் அங்கு தங்கி உள்ளவர்களுக்கு வழங்கும் வசதிகள், சலுகைகள் மிக மிக அதிகம். இலங்கைவிவகாரத்தில் தமிழர்கள் செய்வது வெறும் அரசியல் தான். 

இந்த அரசியல் தொடரும் வரை 7 பேர் விடுதலை கூட கனவும் கற்பனை தான். ஆனால் அது பற்றி யாருக்கும் கவலை இல்லை. இங்கு அரசியல் கட்சிகள் செய்வது அரசியல் என்பதை மக்கள் புரிந்து கொள்வது நல்லது.  இன்றைக்கு இலங்கை தமிழர்களுக்கு நேர்வது எதிர்காலத்தில் தமிழகத்திலும் நேரலாம். வட மாநிலத்தவர்கள் குடியேறுவது காரணமாக. அப்போதும் இவர்கள் ஓட்டு எப்படி விழும் என்று பார்த்து தான் நடவடிக்கை எடுப்பார்கள்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP