முறையாக தேர்தல் நடந்திருந்தால் திமுக ஆட்சிக்கு வந்திருக்கும்: மு.க.ஸ்டாலின்

2016 சட்டப்பேரவை தேர்தல் முறையாக நடந்திருந்தால் திமுக தான் ஆட்சியை பிடித்திருக்கும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 | 

சென்னை கலைஞர் அரங்கத்தில் அமமுகவினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அண்மையில் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த பரணி கார்த்திக்கின் ஆதரவாளர்கள் 5000 பேர் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கையால் இன்பதுரை தற்போது துன்பதுரை ஆகிவிட்டதாக விமர்சித்தார். 

மேலும்,  2016ல் முறையாக சட்டப்பேரவை தேர்தல் நடந்திருந்தால் திமுக தான் ஆட்சியை பிடித்திருக்கும் என்றும், ராதாபுரம் மட்டுமின்றி 15 இடங்களில் இதேபோல் திமுக வெற்றியை தடுத்து நிறுத்தியதாக ஸ்டாலின் தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP