இலங்கை நாடாளுமன்ற கலைப்பு மிகமோசமான ஜனநாயகப் படுகொலை: ராமதாஸ்

இலங்கையின் பரபரப்பான அரசியல் சூழலில், நேற்று நள்ளிரவில் இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். இலங்கை நாடாளுமன்ற கலைப்பு மிகமோசமான ஜனநாயகப் படுகொலை என ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார்.
 | 

இலங்கை நாடாளுமன்ற கலைப்பு மிகமோசமான ஜனநாயகப் படுகொலை: ராமதாஸ்

இலங்கையின் பரபரப்பான அரசியல் சூழலில், நேற்று நள்ளிரவில் இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.  மேலும், வருகிற ஜனவரி 5ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.  

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது தொடர்பாக தமிழகத்தின் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இனப்படுகொலையாளி இராஜபக்சேவுக்கு பெரும்பான்மையை திரட்ட முடியாததால் இந்த முடிவை சிறீசேன எடுத்துள்ளார். இது மிகமோசமான ஜனநாயகப் படுகொலை. இது கண்டிக்கத்தக்கது!" என பதிவிட்டுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP